சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக் 11) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் அக் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு.
தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, நீலகிரி, திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை (அக் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி
நாளை மறுநாள் (அக் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல்,தேனி
தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. அதற்கு ஏற்றார்போலவே பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் ஆங்காங்கே கனாழை கொட்டி வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழையானது பெய்து வருகிறது.