டெல்லியில் 14 வருடங்களில் இல்லாத அளவு கனமழை… 10 பேர் பலி!

Heavy Rain
Heavy Rain
Published on

வெளிநாடுகளில் சிறிதுகாலமாக காலநிலை மாற்றத்தால், இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு மக்களை காவு வாங்கின. தற்போது இந்தியாவிலும்  தொடர்ந்து பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.

ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் காலநிலை மாற்றத்தால் அதிக மழையுடன் சூராவளி காற்று வீசியதில் கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர். சில நாடுகளில் எரிமலை வெடிப்பு, நில அதிர்வு போன்ற பேரிடர்களும் ஏற்படுகின்றன. அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நாட்டில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. மேலும், எப்போதும் போல் இல்லாமல், இந்தியாவில் அரோரா ஒளி தோன்றியது.

இதுபோன்ற ஏராளமான இயற்கை சம்பவங்கள் காலநிலை மாற்றத்தால் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஏற்படுகின்றன. இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக பலி எண்ணிக்கை ஏற்பட்டது. அதிக மழை பெய்து பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

இப்படியான சூழலில்தான் தற்போது இந்தியாவில் தொடர்ந்து இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. கேரளா நிலச்சரிவில் சிக்கியவர்களே இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுவே இன்னும் முடியாத நிலையில், தற்போது டெல்லியில் மழைக் கொட்டித்தீர்த்து வருகிறது. டெல்லியில் புதன்கிழமை மாலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. 14 வருடங்களில் பெய்யாத மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது.

இதனால், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. மேலும் டெல்லியில் 5 பேரும், குருகிராமில் 3, கிரேட்டர் நொய்டாவில் 2 பேர் என 10 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 5 வரை கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஷிம்லாவிலும் அதிக மழை பெய்து வருவதால், வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ராணுவம் மற்றும் விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குஜராத்தில் சண்டிபுரா தொற்றினால் 59 பேர் பலி… அச்சத்தில் இந்திய மக்கள்!
Heavy Rain

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பல பகுதிகளில் நேற்று மழை பெய்ய தொடங்கியது. மோகா, டர்ன் தரன், பதிண்டா, பெரோஸ்பூர், ஃபரித்கோட், அம்பாலா பகுதிகளில் கணிசமான மழையளவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், பல பகுதிகளில் தண்ணீர்த் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. தலைநகரான சண்டிகரில் 22.8 மி.மீ. அளவுக்கு மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com