மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… 3 பேர் பலி!

Helicopter Accident
Helicopter Accident
Published on

இன்று காலை 6.45 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹெலிகாப்டர் நொருங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர்.

விபத்துகளிலேயே மிகவும் மோசமானது ஹெலிகாப்டர் விபத்துதான். வானத்திலிருந்து கீழே விழுந்தது என்றால், ஒருவர் பிழைப்பதுக்கூட மிக மிக அரிது. அதனாலேயே மற்ற போக்குவரத்துகளை விட ஹெலிகாப்டர் பயணத்திற்கு பல முன்னேற்பாடுகள் செய்யப்படும். ஆனால், அதையும் மீறி பல இடங்களில் அவ்வப்போது ஹெலிகாப்டர் விபத்து ஏற்படுகிறது.

அந்தவகையில்,  புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை 6:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விமானிகள் கிரீஷ் குமார் பிள்ளை, பரம்ஜித் சிங் மற்றும் பொறியாளர் பிரிதாம்சந்த் பரத்வாஜ் ஆகிய மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அந்த மூன்று பேரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என தெரிய வந்துள்ளது. ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன.

கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல்,  போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசின் அதிரடி உத்தரவு!
Helicopter Accident

முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஹெரிடேஜ் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அதில் VT EVV என்ற பதிவு எண் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியதாக புனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இதுத்தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com