தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசின் அதிரடி உத்தரவு!

Monsoon
Monsoon
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிரடியாக பிறப்பித்துள்ளது.

பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே நாட்டில் பல்வேறு இடங்களில் மழைக் கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பலி எண்ணிக்கையும் உயர்ந்தது. தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மழைக் கொட்டித்தீர்த்தது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததும் அதிக அளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஆகையால், பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இந்த பருவமழையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மூன்று மாதங்கள் வரை நின்று பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் மொத்தமாக கொட்டிவிடுகிறது. இதனால் எதிர்பாராத வெள்ளம் மற்றும் உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.
இதற்காக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் அவ்வளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பருவமழை குறி வைத்தது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் அந்த நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தூத்துக்குடியும், திருநெல்வேலியும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுபோன்ற எந்த பாதிப்பும் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பருவமழை குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:
News 5 – (01.10.2024) மீண்டும் களமிறங்குகிறார் சச்சின் டெண்டுல்கர்!
Monsoon

சென்னையில் மட்டும் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க 13 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன், மேக்னாத்ரெட்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழை பணிகளை மண்டல வாரியாக துரிதப்படுத்தி முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல்,  வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய பேனர்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை  சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இதுபோல, பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போடப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com