மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

ramadoss
ramadoss
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர். ராமதாசுக்கும் , அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் கட்சி தொடர்பான உரிமை பிரச்சனை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் மருத்துவ ராமதாஸ் , பாமகவின் தேர்தல் சின்னமான மாம்பழத்தை முடக்குவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். 

பாமக கட்சி யாருக்கு சொந்தமானது? என்ற உரிமையியல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து ராமதாஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றமும் ராமதாசை சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அன்புமணி தரப்பிற்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் ராமதாஸ் தரப்பிற்கும் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இதன் காரணமாக மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM எந்திரம் பறிமுதல்..!
ramadoss
logo
Kalki Online
kalkionline.com