இந்தி நோ யூஸ்.. ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள்; ராகுல் காந்தி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சர்வதேச அளவில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டுமானால், ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம்.. வெறும் இந்தி மட்டும் போதாது என்று காங்கிரஸ் எம்.பி-யான ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகின்றார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடிவடைகின்றது. இந்நிலையில்  நேற்று ராஜஸ்தான் ஆழ்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  ராகுல் காந்தி பேசியதாவது;

சர்வதேச அளவில் சாதிக்க வேண்டுமானால், இந்தி மட்டும் பயன்படாது. ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம். உலகின் மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால் இந்தி ஒருபோதும் பயன்படாது, ஆங்கிலம் தான் அந்த இடத்தில் உங்களுக்கு பயன்படும், எனவே அனைவரும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் இதுதான் உங்களுக்கு நல்லது  என அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com