இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே நடந்து வரும் போரில், இஸ்ரேலின் கல்லறைகளுக்கு நடுவில் ஹிஸ்புல்லாவின் ஒரு சுரங்கப் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரேல் காசா போர் தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளது . ஆனால், இன்னும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பல உலக நாடுகளும் இஸ்ரேலிடம் போரை நிறுத்தும்படி கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை போரை நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டது. மேலும் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. ஆகையால், ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அதேபோல், இஸ்ரேலும் ஈரான் மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேபோல் இந்த போர் லெபனான் வரை விரிவடைந்துள்ளது. இதுவரை லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறினர். அதேபோல், அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். ஆகையால், அங்குள்ள பிற நாட்டினருக்கு அந்தந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளன. இந்தியாக்கூட உதவி எண்களை அறிவித்தது. தென்கொரியா தங்கள் நாட்டினரை விமானம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டது.
இப்படி இஸ்ரேல் காசா போர் விரிவடைந்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் அச்சம் நிலவி வருகிறது.
இந்தநிலையில், சமீபக்காலமாக இஸ்ரேலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகவும் முக்கியமான ஒரு சுரங்கப் பாதைதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள கல்லறைகள் இருக்கும் இடத்திற்கு நடுவே சுரங்கப் பாதை இருந்தது கண்டறியப்பட்டது. இதில் கட்டுப்பாட்டு அறைகள், தூங்கும் வசதிகள் என முக்கிய வசதிகள் அங்கு இருந்தன. மேலும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைப் பார்த்த இஸ்ரேல் இறந்துவிட்டாலும், அல்லது உயிரோடு இருந்தாலும் மனித உயிரை ஹிஸ்புல்லா அமைப்பினர் மதிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்த சுரங்கப்பாதை 4500 கனமீட்டர் கான்கிரீட் கொண்டது என்றும் தெரியவந்துள்ளது.
இதேபோல்தான் கடந்த மாதம் லெபனான் பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தில் ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதை இல்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.