ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டிய தமிழக காவலரின் வீரதீர செயல்!முதல்வர் விஜய் பாராட்டு..!

40 கி.மீ தூரம் காரின் மீது பயணம்! ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டிய தமிழக காவலரின் வீரதீர செயல்
Vijay and Velmurugan
police velmurugan
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி போதைப் பொருட்களை சட்டவிரோதமாக ஒரு கும்பல் கடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. கோவைக்கு அடுத்து உள்ள கோவில்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதியில், காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று கொண்டிருந்தது.

கடத்தல் கும்பல் காவல்துறையின் வாகனத்தை கண்ட பின்னர், அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அவர்கள் வந்த வழியில் இருந்து, சட்டென்று வேறு வழிக்கு காரை திருப்ப முயற்சி செய்வதைக் கண்ட காவலருக்கு கடும் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்த, தலைமைக் காவலர் வேல்முருகன் எதையும் யோசிக்காமல் கடத்தல் காரின் மீது தாவி பிடித்துக் கொண்டார்.

அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான முறையில் காரின் மேற்பகுதியை பிடித்துக் கொண்டு, அதன் மீது படுத்தவாரே அந்த காரில் உள்ளவர்களை தப்பிக்க விடாமல் பார்த்துக்கொண்டார். சினிமாக்களில் மட்டுமே காரின் மேற்பகுதியில் இருந்து சண்டையிடும் காட்சிகளையும், துரத்தும் காட்சிகளையும் பார்த்து இருப்போம். இந்த சம்பவத்தை பொதுமக்களின் கண் முன்னாலே போலீஸ்காரரான வேல் முருகன் நிகழ்த்தி காட்டினார்.

அவரது பிடி நழுவினால் கடுமையான காயங்கள் ஏற்படும், உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று அவர் எந்த அச்சமும் படவில்லை. மேலும் கடத்தல்காரர்கள் காரை அதிவேகமாக ஓட்டினாலும், ஒருபுறம் லேசாக சாய்த்தாலும் பலத்த சேதங்கள் வேல்முருகனுக்கு ஏற்பட்டு இருக்கும். ஆனாலும் எதற்கும் கலங்காமல் அந்த குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்பதில் வேல்முருகன் தீர்மானமாக இருந்தார்.

போதைப் பொருள் கடத்தல் காரர்கள், கோவை - அவிநாசி பைபாஸ் சாலை வழியாக காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தூரம் அந்த காரின் மீது படுத்தே பயணம் செய்து, பிற காவல்துறை அதிகாரிகளுக்கு தனது மொபைல் போன் மூலம் தகவலை தெரிவித்து, கடத்தல் வாகனத்தை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வைத்தார். அவிநாசி அருகே அந்த கடத்தல் வாகனத்தை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

Vijay and velmurugan
CM vijay

வேல்முருகனின் துணிச்சலான செயல்பாட்டின் மூலம் காரில் குட்கா கடத்திய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 233கிலோ குட்கா , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தனது உயிரை பணயம் வைத்து தனது கடமையை நிறைவேற்றிய அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட காவலரான வேல்முருகனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவர் காரில் மீதேறி துரத்திச் சென்ற சம்பவத்தை, நேரில் பார்த்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர். வேல்முருகனின் வீரதீர செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் விஜய், அவரை நேரில் அழைத்து வணக்கம் வைத்து வரவேற்றார், பின்னர் அவரை பாராட்டி சிறப்பித்தார்.

​இதற்கு முன்னர், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் (DGP) வேல்முருகனைத் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். இக்கட்டான காலகட்டத்தில் காவல்துறை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தலைமை காவலர் வேல்முருகன் உதாரணமாக இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com