‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளை அம்மையாருக்கு வீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Home for Chinnapillai Ammaiyar under 'Kalaignar Dream Home' scheme: CM Stalin's announcement
Home for Chinnapillai Ammaiyar under 'Kalaignar Dream Home' scheme: CM Stalin's announcementhttps://tamil.asianetnews.com

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மையாருக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இது குறித்து இன்று வெளியிடப்பட்டு இருக்கும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில்,

முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியிடம் கடந்த 2000ம் ஆண்டில் ‘ஸ்த்ரிசக்தி’ புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மையார். இவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை’ என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

இந்த செய்தியினை கேள்விப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மையாருக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள்:
படைப்பாளிகளைக் கௌரவப்படுத்தும் விதமாக முதல்முறை டெல்லியில் National Creators Award விழா!
Home for Chinnapillai Ammaiyar under 'Kalaignar Dream Home' scheme: CM Stalin's announcement

இதன்படி, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மையாருக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மையாருக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com