பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உலகம் முழுவதுமே எங்கேயும் பாதுகாப்பு இல்லை என்பது நாம் வருத்தப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய ஒன்றும் கூட. குறிப்பாக சமீபக்காலமாக சிறுமிகளுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்குமே பாலியல் தொல்லைகள் இருந்து வருகின்றன. இந்த நாட்டில்தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று சொல்லும் அளவிற்கு எந்த நாடும் இல்லை. பெண்களுக்கான பாதுகாப்பான இடம் வீடுதான்.
அதேபோல் பாதுகாப்பான நபர்கள் என்றால் உறவினர்கள்தான் என்பது நம்முடைய கூற்று. ஆனால், இப்போது வெளியான ஆய்வறிக்கையின்படி பெண்கள் அதிகளவு பாலியல் தொல்லைகளை சந்திப்பது அவர்கள் உறவினர்களால்தான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தான விரிவான அறிக்கையை பார்ப்போம்.
உலக முழுவதும் கடந்த 2023ம் ஆண்டு ஒரு நாளில் சராசரி 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் துணையினால் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கையில் கூறியிருக்கிறது.
கடந்த 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டது. அந்த தினத்தை முன்னிட்டு இந்த அறிக்கையை ஐநாவின் போதைப் பொருள்கள் குற்ற செயல்கள் தடுப்பு அமைப்பு (UNODC) வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் உலக அளவில் மொத்தம் 51,100 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மரணத்திற்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களே காரணம் என்றும், அந்தவகையில் பார்த்தால் ஒருநாளைக்கு 140 பெண்கள் ஒரு நாளைக்கு கொல்லப்படுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறார். ஒரு நிமிடத்திற்கு ஒருவர் என்று கணக்கில் வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என 48,800 பேர் தங்களுடைய துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பிரச்னைகளால் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக உலகிலேயே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தான இடம் வீடுதான் என்று ஐநா தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆப்பிரிக்கா உள்ளது. இங்கு பாலியல் உட்பட பல்வேறு செயல்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் 21700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு லட்சம் பெண்களில் 1.6 சதவீதம் பெண்களும், ஆசியாவில் ஒரு லட்சம் பேருக்கு 0.8 பேரும், ஐரோப்பாவில் ஒரு லட்சம் பெண்களில் 0.6 சதவீதம் பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.