டெல்லியில் கோரத் தீ விபத்து.. 11 பேர் பலி!

Fire at paint factory
Fire at paint factory

டெல்லியில் உள்ள ஆலிபூர் சந்தையில் தனியாருக்கு சொந்தமான ஒரு பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 11 பேர் பலியாகியுள்ளனர்.

ஆலிபூர் சந்தையில் அமைந்துள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் கோரமான தீ விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் தொழிற்சாலை என்றாலே ரசாயனங்கள் நிறைந்தது என்பதால், தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் முக்கால்வாசி இடங்களில் தீ பரவியது. இதனால் அந்த இடமே கரும்புகையால் சூழ்ந்தது. இந்த கரும்புகை காரணமாகவும், தீ நிறைய இடங்களில் பரவியதாலும் தீயை அணைக்க நான்கு மணி நேரம் ஆனது. இந்த நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னர் ஒருவழியாக தீயணைப்பு வீரர்கள் 9 மணியளவில் தீயை அணைத்துவிட்டனர்.

இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது, “நேற்று தொழிற்சாலையின் உள்ளே அதிக வெப்பமாக இருந்ததால் இந்த விபத்து நடந்திருக்க கூடும். தொழிற்சாலையின் மேல் தளத்தில் தீ பரவாததால் 6 பேர் அங்கு சென்று தப்பித்துவிட்டனர். அதேபோல் அருகில் இருந்த சில கடைக்களுக்கும் தீ பரவியதால் மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தீ விபத்து ஏற்பட்ட சில நேரங்களுக்கு பின்னரே எங்களுக்கு தெரிய வந்ததால் விரைவாக சம்பவ இடத்திற்கு வரமுடியவில்லை” எனக் கூறினர்.

இதையும் படியுங்கள்:
கடந்த காலத்தை நினைத்து முதியவர்கள் கவலைப்படும் விஷயங்கள் எவை தெரியுமா?
Fire at paint factory

இதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று தெரிய வரவில்லை. இருப்பினும் இதன் முதற்கட்ட விசாரணையில் பெயிண்ட் தொழிற்சாலை ரசாயனங்கள் நிறைந்ததால் இது ஒரு விபத்தாகத்தான் இருக்கும் என்று போலிஸார் கூறுகின்றனர். மேலும் ஐபிசி 304 என்ற செக்ஷனுக்கு கீழ் டெல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையை நடத்தி வருவது அகில் ஜெயின் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com