ஹோட்டல் அறையிலிருந்து எதையாவது 'ஆசைப்பட்டு' எடுத்து வருகிறீர்களா? - இனி அபராதம் மட்டுமல்ல சிறைக்கும் செல்லலாம்..!

hotel stays
hotel stays
Published on

சுற்றுலா செல்லும் போது ஸ்டார் ரக ஹோட்டலில் தங்குவது பெரும்பாலானோர் வழக்கம். அங்கு கண்களைப் பறிக்கும் வகையில் உள்ள சில பொருட்கள் மீது ஆசைப்பட்டு தங்கள் பைக்குள் அதை எடுத்து வருபவர்களும் உண்டு. இதில் சிலருக்கு ஆர்வம் அதிகமாகி, தேவைப்படாவிட்டாலும் எதையாவது எடுத்துச் சென்றால்தான் நிம்மதி என்ற நிலை இருக்கிறது.அதிலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு சில நேரங்களில் அவர்கள் அழைத்து வந்து தங்கவைக்கும் பிரபலங்களால் இது போன்ற தொல்லைகள் வந்து அதற்காக இவர்கள் கப்பம் (அபராதம்) கட்டவேண்டிய நிலை ஏற்படும்.

இப்படி பொருட்களை எடுத்து வந்தால் இனி ஹோட்டல் நிர்வாகம் தயவு தாட்சண்யமின்றி அபராதத்தை நிச்சயமாக வசூலிக்கும் என செய்திகள் கூறுகின்றன.

ஆனாலும் ஹோட்டல் அறையில் உள்ள சில பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்லும் அனுமதி நமக்கு உள்ளது. Complimentary Items எனப்படும் சிறிய சோப்பு, ஷாம்பு , சிறு கண்டிஷனர் பாட்டில்கள், டூத் பிரஷ், டூத் பேஸ்ட்

டீ/காபி ஷாசேக்கள், ஒருமுறை பயன்பாட்டுக்கு உதவும் Disposable Slippers ஆகியவைகளை “Complimentary” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டும் எடுத்துச் செல்லலாம்.

பொதுவாக அபராதம் விதிக்கப்படும் பொருள்களாக இவைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துணிவகைகள் (Towels, Bed sheets, Pillow covers) போர்வை / கம்பளி ,கண்ணாடி, கப், தட்டு ,ஹேர் ட்ரையர், கெட்டில் ,டிவி ரிமோட் மற்றும்

அலங்கார பொருட்களுடன் அறையிலுள்ள மேஜை, நாற்காலி, விளக்குகள் போன்றவைகளை எடுத்தால் உங்கள் பில்லில் கூடுதல் தொகை சேர்க்கப்படும் அல்லது சில சமயங்களில் சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்.

ஸ்டார் ரக ஹோட்டல்கள் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி விலைப்பட்டியல் (Price list) வைத்திருக்கும். நீங்கள் வெளியேறும் (Check-out) நேரத்தில், ஊழியர்கள் அறையை ஆய்வு செய்த பிறகே இறுதி பில் தயாரிக்கப்படும். சில நேரங்களில் சிசிடிவி அல்லது அறை இருப்புப் பட்டியல் (Room inventory) மூலமும் இது கண்டறியப்படும்.

இந்த நடைமுறை இந்தியாவில் மட்டும் தானா என்றால் இல்லை. வெளிநாட்டில் உள்ள ஹோட்டல்களிலும் இதே விதிமுறைகள் உண்டு , சில இடங்களில் அபராதம் இந்தியாவை விட கடுமையாக கூட இருக்கும். பொருள்களுக்கு உண்டான தொகை Credit card-லிருந்து நேரடியாக Charge செய்யப்படும். பெரிய ஹோட்டல்களில் Theft record கூட பதிவு செய்யலாம். சில நாடுகளில் காவல் நிலையம் புகார் (Police complaint) வரைக்கும் போகலாம்.சிங்கப்பூரில் திருட்டுத்தனத்திற்கு 'Zero Tolerance' கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கூடுதல் கட்டணங்களுடன் சட்ட ரீதியான நோட்டீஸையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

சரி. நம்ம விஷயத்துக்கு வருவோம். அறையில் உள்ள பொருட்கள் மீதான குழப்பம் அல்லது சந்தேகம் இருந்தால் ரிஷப்சனில் (Front Desk) கேட்டுவிடுங்கள் “Complimentary” என்று Room Menu / Notice-ல் இருந்தால் மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.

நாம் தங்குவது ஒரு தற்காலிக அறை மட்டுமே என்பதை உணர்ந்து, எதற்கும் ஆசைப்படாமல் ஹோட்டல் வசதிகளை அனுபவித்துவிட்டு வருவதுதான் பாதுகாப்பான வழி.

இதையும் படியுங்கள்:
2025 Rewind: கூகுள் தேடலில் முதலிடம்: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 10 சுற்றுலாத் தலங்கள்!
hotel stays

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com