இனி வீட்டு வரி பெறுவது ஈஸி! வெறும் 2 நிமிடத்தில் உங்கள் போனில் டவுன்லோட் செய்யலாம்..!

House tax receipt
House tax receipt
Published on

அரசு நலத்திட்டங்கள் பெறுவது முதல் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது வரை, பல முக்கிய தேவைகளுக்கு வீட்டு வரி ரசீது அவசியம். இந்த ரசீதை பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் மொபைல் போன் மூலம் எளிதாக, எந்த ஆவணங்களும் இல்லாமல் வீட்டு வரி ரசீதை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சில நேரங்களில் வீட்டு வரி ரசீதை எடுத்து வைத்திருந்தாலும், அதை தொலைத்து விடுவதுண்டு. மீண்டும் தேவைப்படும்போது பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்று காத்திருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இனிமேல், அதை எளிதாக நாமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொபைலில் வீட்டு வரி ரசீது பதிவிறக்கம் செய்வது எப்படி?

1.  முதலில், இணைய வசதி உள்ள உங்கள் மொபைல் போனில் vptax என்ற இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.

2.  முகப்புப் பக்கத்தில் கீழே ஸ்க்ரோல் செய்தால், "வரி செலுத்திய விவரங்களை பார்க்க" என்ற பகுதி இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.  அடுத்து, "வரிவகை" என்பதில் "சொத்து வரி" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

4.  அதன்பின், உங்கள் மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.

5.  இப்போது, "வரிவிதிப்பு எண்" அல்லது "ரசீது எண்" என கேட்கப்பட்டிருக்கும். உங்களிடம் பழைய வீட்டு வரி ரசீது இருந்தால், அதில் உள்ள எண்ணை உள்ளீடு செய்யலாம்.

வரிவிதிப்பு எண் இல்லையென்றால் என்ன செய்வது?

உங்களிடம் பழைய ரசீது இல்லையென்றால், முதலில் உங்கள் வீட்டுக்கான வரிவிதிப்பு எண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.

1.  vptax முகப்புப் பக்கத்தில் "உங்கள் நிலுவைத் தொகையை பார்க்க" என்ற பகுதிக்குச் செல்லவும்.

2.  "வரிவகை" என்பதில் "சொத்து வரி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.  பின்னர், மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.

இதையும் படியுங்கள்:
கையில் ₹1,000 கூட இல்லையா? இனி கவலை இல்லை..! ஒரு மாதத்திற்கு வட்டியில்லா கடன் பெறலாம்..!
House tax receipt

4.  வீட்டின் கதவு எண்ணை உள்ளீடு செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சா (captcha) குறியீட்டை பிழையில்லாமல் டைப் செய்து, "தேடல்" (search) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

5.  இப்போது உங்கள் வீட்டுக்கான வரிவிதிப்பு எண் கிடைக்கும். அதை குறித்து வைத்துக் கொள்ளவும்.

வீட்டு வரி ரசீதை பதிவிறக்கம் செய்தல்

வரிவிதிப்பு எண் கிடைத்த பிறகு, வீட்டு வரி ரசீதை பெறுவது மிகவும் எளிது.

1.  மீண்டும் "வரி செலுத்திய விவரங்களை பார்க்க" பகுதிக்குச் சென்று, மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு சீனாவின் K விசா..! இதன் சிறப்பம்சங்கள் என்ன..?
House tax receipt

2.  வரிவிதிப்பு எண்ணை உள்ளீடு செய்து, கேப்சா குறியீட்டை டைப் செய்யவும்.

3.  பின்னர் "காட்டு" (show) என்பதை அழுத்தினால், உங்கள் வீட்டு வரி ரசீது உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் ஆகிவிடும்.

இந்த வசதியை அவசரத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை தவறான முறையில் பயன்படுத்துவது கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com