வங்கியில் நகை வைப்பவரா நீங்கள்..? ஒருவேளை மோசடி நடந்தால் உங்கள் நகையை மீட்பது எப்படி..?

gold loan
gold loan
Updated on

அவசரத் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் இந்தியர்கள் முன்னனியில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி உழைப்பு முழுவதையும் முதலீடாகப் போட்டு வாங்கிய நகைகளை வங்கிகளை நம்பி தரும் போது சில வேளைகளில் அதிலும் மோசடிகள் நடைபெறுவதுண்டு.அப்படி மோசடிகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன வழிமுறைகளைக் கையாண்டு நகைகளை மீண்டும் பெறலாம் என்பது பற்றிய பதிவு தான் இது.

நகை அடமானம் வைப்பது நமது உரிமை..அதை பாதுகாக்க வேண்டியது வங்கியின் கடமை..மோசடி நடந்தால் உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கியில் அடமானமாக வைத்த நகைகள் தொடர்பாக மோசடிகளாக , நகை மாற்றம், நகை காணாமல் போவது அல்லது போலி நகை திருப்பிக் கொடுக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம.

என்னென்ன நடவடிக்கைகள்?

உடனடியாக வங்கியில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தல்..

  • வங்கியின் கிளை மேலாளருக்கு (Branch Manager) எழுத்துப்பூர்வமாக புகார் தரவேண்டும். அந்தப் புகாரின் நகலைப் பெறப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை (Acknowledgement) வாங்கி வைத்துக் கொள்வது முக்கியம். அடமானம் வைத்த ரசீது, நகை விவரங்கள், புகைப்படங்கள் இருந்தால் புகாருடன் இணைக்கவும்.

வங்கியின் உயரதிகாரிகளிடம் முறையிடல்..

  • கிளை அளவில் தீர்வு கிடைக்காவிட்டால், வங்கியின்பிராந்திய அலுவலகம் அல்லது குறை தீர்க்கும் செல்-க்கு( Regional Office அல்லது Grievance Redressal Cell) புகார் அனுப்பலாம்.பெரும்பாலான வங்கிகளில் ஆன்லைன் புகார் வசதியும் உள்ளது

காவல்துறையில் புகார் அளித்தல்..

  • மோசடி, நம்பிக்கை மோசடி (Criminal Breach of Trust), போலி ஆவணம், திருட்டு போன்ற குற்றங்கள் இருந்தால் FIR பதிவு செய்யும்படி கேட்கலாம்.FIR பதிவு செய்ய மறுத்தால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

RBI வங்கி குறைத்தீர்ப்பாளரை அணுகுதல்..

  • வங்கியில் புகார் அளித்து 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டம் (RBI Integrated Ombudsman Scheme) மூலம் புகார் அளிக்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுவது..

  • உங்கள் நகை நஷ்டத்துக்கு வங்கியின் அலட்சியம் காரணம் என்றால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து நகையின் மதிப்பு, மன உளைச்சல், வழக்குச் செலவு ஆகியவற்றுக்கான இழப்பீட்டையும் நீங்கள் கோரலாம்.

முக்கிய ஆதாரங்கள் பாதுகாப்பு

அடமான ரசீது, நகை வாங்கிய பில், நகையின் புகைப்படங்கள் , வங்கியுடன் நடந்த கடிதப் பரிமாற்றங்கள், நகை மதிப்பீட்டு சான்றுகள் போன்ற ஆதாரங்களை பத்திரமாக வைக்கவும்.

வங்கியின் அலட்சியம் அல்லது ஊழியர்களின் மோசடி காரணமாக நஷ்டம் ஏற்பட்டால் வங்கி பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆகவே தயங்காமல் உங்கள் உரிமைகளை பாதுகாக்க சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அடமானமாக பெற்ற நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு வங்கிக்கே உண்டு. வங்கியின் அலட்சியம் அல்லது ஊழியர்களின் மோசடி காரணமாக நஷ்டம் ஏற்பட்டால், வங்கி பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இனி வங்கியில் வைக்கப்பட்ட நகைகள் மீதும் எச்சரிக்கை தேவை. .

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பைக் வாங்க ரூ.50,000 மானியம்.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
gold loan
logo
Kalki Online
kalkionline.com