குட் நியூஸ்: பைக் வாங்க ரூ.50,000 மானியம்.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Rs.50,000 subsidy for Bikes
Bike Subsidy
Updated on

தமிழக அரசு சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவ்வகையில் தற்போது உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000 வரை மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு சார்பில் ரூ.25,000 வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த மானியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் டெலிவரி வேலை செய்யும் இளைஞர்களுக்கும் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது.

இஸ்லாமிய கோட்பாடுகளை ஆழமாக படித்து தேர்ந்த அறிஞர்களை உலமாக்கள் என்று அழைப்போம். இவர்கள் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆலிம் மற்றும் மௌலவி போன்ற பட்டங்களைப் பெற்றிருப்பார்கள். பள்ளிவாசல்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூலம் பொது மக்களுக்கு மார்க்க ரீதியான கல்வியை உலமாக்கள் போதிப்பர்.

உலமாக்கள் வெறும் ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமல்லாமல் கல்வி, சட்டம் மற்றும் நீதித் துறையின் தூண்களாகவும் திகழ்கின்றனர். சமூகத்தில் இவர்களின் பங்கைப் போற்றும் விதமாக, தற்போது உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத்தை ரூ.50,000 ஆக உயர்த்தி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

* தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

* பள்ளிவாசலில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் உள்பட அனைத்து உலமாக்களும் இருசக்கர வாகன மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

* இவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

* 18 முதல் 60 வயதுக்குட்டபட்டோர்.

இதையும் படியுங்கள்:
இனி தொழில் தொடங்க 21 நாட்கள் போதும்.! அமைச்சர் கீர்த்தனா அதிரடி.!
Rs.50,000 subsidy for Bikes

மாவட்ட வாரியாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரிடம் மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

1. ஆதார் கார்டு

2. ரேஷன் கார்டு

3. உலமாக்கள் நல வாரிய உறுப்பினர் அட்டை

4. மாற்று சான்றிதழ்

5. ஓட்டுநர் உரிமம்

6. வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்

7. பணிச் சான்றிதழ்

8. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

கடைசி தேதி:

பூர்த்தி செய்த படிவத்தை ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உங்களது படிவத்தை அதிகாரிகள் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளித்த பிறகே நீங்கள் இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும்

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி சைக்கிள் விலையில் இ-பைக் கிடைக்கும்.!
Rs.50,000 subsidy for Bikes
logo
Kalki Online
kalkionline.com