இரண்டு மாநிலங்களில் 88 தொகுதிகளில் தோல்வியின் அபாயத்தை தவிர்த்த பா.ஜ.க!
பிரதமர் நரேந்திர மோடி வரும் மக்களவைத் தேர்தலில் மற்றொரு தீர்க்கமான வெற்றியை கையளிக்கும் வகையில், பா.ஜ.க. “ஆப்கி பார், 400 பார்” என்னும் கோஷத்தை தேர்தல் முழக்கமாக்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோடியை ஆட்சியை அனுப்புவதற்கு ஹிந்தி பேசும் மாநிலங்கள் முக்கிய காரணமாக இருந்தபோதிலும், குறைந்த மக்களவைத் தொகுதியையே அது சார்ந்திருந்தது.
குறிப்பாக பிகார் மற்றும் மகாராஷ்டிரத்தில் அதன் கூட்டணி கட்சிகளின் வீழ்ச்சியால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது. 2022 இல் நிதிஷ்குமார் பா.ஜ.க.வை ஒதுக்கித் தள்ளினார். மகாராஷ்டிரத்தில் 2020 இல் பா.ஜ.க.-சிவசேனை இடையே அதிகாரப் பகிர்வு போட்டி காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
பிகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களை கைப்பற்றியது. 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்தன. 40 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. லோக் ஜனசக்தி கட்சி 6 இடங்களில் போட்டியிட்டது.
ஆனால், மக்களின் மனம் கவர்ந்த தலைவரும் லோக ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் 2020 இல் மறைந்தது நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு பிரிந்தது ஆகியவற்றின் காரணமாக 2024 மக்களவைத் தேர்தலில் பிகாரில் குறைந்த இடங்களில் மட்டுமே வெல்லமுடியும் என பா.ஜ.க. முதலில் கருதியது.
இப்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமாரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவந்ததன் மூலம் மீண்டும் 2019 ஆம் ஆண்டைப் போலவே அதிக இடங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.
மகாராஷ்டிரத்தை பொறுத்தவரை அங்கு பா.ஜ.க.-சிவேசேனை ஷிண்டே மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. 2020 இல் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்து சிவசேனை கட்சி ஆட்சியமைத்தாலும் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆட்சியும் சில மாதங்களிலேயே கவிழ்ந்த்து. சிவசேனை கட்சி பிளவு பட்டு இருப்பதாலும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பிளவு நீடிப்பதாலும் வரும் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனை (ஷிண்டே), அஜித்பவார் கூட்டணிக்குத்தான் வெற்றிவாய்ப்பு அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

