

இன்றைய நவீன உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழலில், வான்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை விட, கடலடியில் கிடக்கும் மெல்லிய கண்ணாடியிழை (Fiber_optic) கேபிள்களே உலகை இயக்கும் உண்மையான நரம்பு மண்டலங்களாக உள்ளன.
ஒரு தோட்டத்துப் குழாயின்( pipe) அளவு தடிமன் கொண்ட இந்தக் கேபிள்கள், கண்டங்களுக்கு இடையே 99 சதவீத இணையத் தரவுகளைக் கடத்துகின்றன. குறிப்பாக, செங்கடல் மற்றும் ஹார்முஸ்_நீர்ச்சந்தி போன்ற பகுதிகள் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மிக முக்கியமான 'டிஜிட்டல் நுழைவு வாயில்களாக' இருக்கின்றன.
உலகெங்கும் சுமார் 600-க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கேபிள்கள் (Submarine_Cables) உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பு கூட, ஒட்டுமொத்த சர்வதேசத் தொடர்புகளையும் முடக்கிவிடும் வல்லமை கொண்டது. இந்தக் கேபிள்கள் துண்டிக்கப்பட்டால், அதைச் சீரமைப்பது என்பது ஒரு பிரம்மாண்டமான Engineering_challenge ஆக இருக்கும்.
முதலில், தரையிலிருந்து OTDR (Optical Time Domain Reflectometry) எனும் ஒளியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள கேபிளில் எந்த இடத்தில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும்.
அதன் பிறகு, பிரத்யேக 'கேபிள் பழுதுபார்க்கும் கப்பல்கள்' அந்த இடத்திற்கு அனுப்பப்படும். கடலின் ஆழத்திலிருந்து துண்டிக்கப்பட்ட முனைகளை மேலே இழுத்து, ஒரு தூய்மையான அறையில் வைத்து (Clean Room) மனித முடியை விட மெல்லிய இழைகளை மீண்டும் இணைக்க வேண்டும்.
ஒரு கேபிளைச் சீரமைக்க சராசரியாகப் பல நாட்களும், சில சமயம் வாரங்களும் தேவைப்படும். யுத்தம் அல்லது பதற்றம் நிலவும் பகுதிகளில் இந்தக் கப்பல்கள் செல்வது உயிருக்கு ஆபத்தானது என்பதால், சீரமைப்புப் பணிகள் காலவரையன்றித் தள்ளிப்போகக்கூடும்.
இந்தக் கேபிள்கள் வெறும் தகவல்களை மட்டும் சுமந்து செல்வதில்லை அவை உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன. உலகின் 99% தரவுகள் இதன் மூலமே செல்கின்றன. செயற்கைக்கோள்கள் வெறும் 1% மட்டுமே கையாளும் திறன் கொண்டவை.ஒரு மணிநேர இணைய முடக்கம் உலகப் பொருளாதாரத்திற்குப் பல பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு நாளும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பங்குச் சந்தைப் பரிமாற்றங்கள், வங்கிகளுக்கு இடையிலான நிதியிடமாற்றங்கள் மற்றும் கிளவுட் சேமிப்புத் தரவுகள் இதன் மூலமே பயணிக்கின்றன. இராணுவத் தகவல்கள் முதல் உளவுத் துறை தரவுகள் வரை அனைத்தும் இதன் மூலமே பகிரப்படுகின்றன.
ஒரு முக்கியமான கேபிள் துண்டிக்கப்பட்டால், இணைய வேகம் குறைவதோடு மட்டுமல்லாமல், நிதிச் சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. சர்வதேச வர்த்தகம்,Logistics மற்றும் இணையம் சார்ந்த தொழில்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும். குறிப்பாக, வளர்ந்து வரும் AI தொழில்நுட்பங்கள் மற்றும் Cloud Computing ஆகிய அனைத்தும் இந்த ஆழ்கடல் கட்டமைப்பையே நம்பியுள்ளதால், இதன் பாதிப்பு ஒரு தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) பாதிக்கும் அளவிற்குப் பாரதூரமானது.
ஈரான் இந்த கேபிள்களைத் துண்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) பகுதிகளில் நிலவும் பதற்றம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு இடங்களும் உலகின் Digital Chokepoints என்று அழைக்கப்படுகின்றன. எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களைப் போலவே, ஆழ்கடல் கேபிள்களும் இன்று ஒரு நாட்டின் மிக முக்கியமான மூலோபாயச் சொத்தாக (Strategic Asset) மாறிவிட்டன.
எண்ணெய் விநியோகத்தை விட, இணையக் கேபிள்கள் பாதிப்படைவது நவீன உலகிற்கு அதிக சேதத்தை விளைவிக்கும். இவற்றைத் தாக்குவது என்பது ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் நேரடிப் போருக்குச் சமமான அழிவைத் தரும்.