யுவான் கொடுத்தால் தான் வழி..! - ஹார்முஸ் நீரிணையை 'டோல் கேட்டாக மாற்றிய ஈரான்..!

How Iran Plans To Turn Strait Of Hormuz Into Toll Route
How Iran Plans To Turn Strait Of Hormuz Into Toll Route
Updated on

இந்த போரில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்ககு வழிவகுத்தது. காரணம் உலகுக்கு தேவையான 25 சதவீதம் அளவிலான பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்கள் விநியோகம் ஆகி வந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் அதன் விளைவு பல நாடுகளில் எதிரொலித்தது.

இந்த நீரிணை வழியாக நடைபெறும்  கப்பல் போக்குவரத்து மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பெற்று வந்த சீனா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள்  தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது நேரடியாக பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்ததால் போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா  நாடுகள் இடையே பல நாடுகள் மூலம் பேச்சுவார்த்தைகள் மற்றும் பல்வேறு கெடுக்கள் வைக்கப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகிறது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு நாடாளுமன்றத்தில் விரைவில் இயற்றப்படும் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகளில் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்வதற்கு ஈரான் முதல்முறையாக 'ஆன்லைன் யுவான் (CNY) கட்டண முறையை' அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் வழியாகப் பொருள்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே என்பதால் இந்த கட்டணம் நியாயமானதே என கருதப்படுகிறது.

அமெரிக்க வங்கி அமைப்புக்கு மாற்றாக அமெரிக்க டாலருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரான் முன்னெடுத்துள்ள இந்த  அதிரடி கட்டண வசூல் அமெரிக்காவிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
#BREAKING ஐபிஎல் 2026: குஜராத் அணியை வீழ்த்தி, வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்.!!
How Iran Plans To Turn Strait Of Hormuz Into Toll Route

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com