.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) என காலியாக உள்ள 1,996 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12, 2025 அன்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
இத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) அதன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் செப்டம்பர் 30 முதல் இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டினை இந்த இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஜூலை 10 அன்று வெளியிட்ட அறிவிக்கை எண் 02/2025-ன்படி, பல்வேறு ஆசிரியப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெற்றது.
அரசு அறிவிக்கப்பட்டமொத்த காலிப் பணியிடங்கள் 1,996 ஆகும்.. விண்ணப்பித்தோர்களின் எண்ணிக்கை: 2,36,530 பேர் ஆகும்.
தேர்வு நாள்: அக்டோபர் 12, 2025 ஆகும்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இத்தேர்வினை எழுத விண்ணப்பித்த 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 30.09.2025 முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான https://www.trb.tn.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று, அங்குத் தங்களது பதிவு எண் (Register Number) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டைப் கடைசி நேரத்தில் பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்க முடியும்.