ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த ஹங்கேரிய எழுத்தாளர்..! இவர் யார் தெரியுமா..?

hungarian writer laszlo receives nobel prize for literature
hungarian writer laszlo receives nobel prize for literaturesource : vikatan.com
Published on

இலக்கியத்திற்கான நோபல் பெறும் ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் வாக்கியங்கள் மிகவும் நீளமானதாகவும், சில சமயம் ஒரு முழுப் பக்கத்திற்கு கூட ஓடக்கூடியதாகவும் இருக்கும். இந்த அசாதாரணமான பாணி தான் அவருடைய அடையாளமாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்று, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய். இது அவருடைய வெறும் ஒரு தனிப்பட்ட வெற்றியல்ல.இவ்வெற்றி பல ஆண்டுகளாக, தனது தனிப்பட்ட கலைப் பாதையில் பயணித்த ஒரு கலைஞனின் மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

தற்போது உலகமக்கள் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.எழுதுவதற்கு கற்பனைத் திறனும் படைப்பாற்றல் திறனும், மொழியற்றாலும் தேவைப்படுவதால் எழுதுவதில் பலர் தன்முனைப்பைக் காட்டுவதில்லை. இந்நிலையில் இவர் சவாலான, ஆழமான படைப்புகளை உருவாக்கினார்."உலகம் பயத்தில் இருக்கும்போது, கலையின் வலிமை எவ்வளவு பெரியது என்று இவர் நிரூபித்துள்ளார்," என்று நோபல் கமிட்டி இவரைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராஸ்னஹோர்காயின் பயணம் நமக்குச் சொல்வது, எந்தத் துறையாக இருந்தாலும், நமது தனிப்பட்ட திறமைக்கு நாம் உண்மையாக இருந்தால், உலகம் ஒருநாள் நம்மைத் தேடி வரும் என்பதுதான்.லாஸ்லோ கிராஸ்னஹோர்காய், 1954-ல் ஹங்கேரியில் பிறந்தார். சட்டப் படிப்பு படித்தவர் என்றாலும், இலக்கியத்தின் மீது கொண்ட தீராத பற்றினால், ஹங்கேரிய மொழியிலும், இலக்கியத்திலும் கற்றுத் தேர்ந்தார். அவருடைய வாழ்க்கையின் தொடக்க நாட்களில், கம்யூனிச ஆட்சியின் கட்டுப்பாடுகள் மிக அதிகமாக இருந்தன. குறிப்பாக, வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அவருடைய கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சவாலான சூழ்நிலையில்தான் அவர் எழுதத் தொடங்கினார்.

தனக்கு இருந்த அடக்குமுறை உணர்வுகளை அவர் சலிப்பாக மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால். தனது முதல் நாவலான 'சத்தான் டாங்கோ'-வில் (Satantango) இவற்றை தன் தீவிரமான உணர்வுகளாக மாற்றினார். லாஸ்லோவின் இரண்டாவது நாவலான 'எதிர்ப்பின் மனச்சோர்வு' (The Melancholy of Resistance)-என்னும் நூலைப் படித்த அமெரிக்க விமர்சகர் சூசன் சோண்டாக், இவரைச் சமகால இலக்கியத்தின் 'பேரழிவின் மாஸ்டர்' என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கிராஸ்னஹோர்காய், தனது எழுத்தில் ஏற்படுத்திய ஒரு புரட்சிகரமான மாற்றம், அவர் முற்றுப் புள்ளிகளை (Full Stop) பயன்படுத்துவதைத் தவிர்த்ததுதான்.

இதனால், அவருடைய வாக்கியங்கள் மிகவும் நீளமானதாகவும், சில சமயம் ஒரு முழுப் பக்கத்திற்கு கூட இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவருடைய இந்த அசாதாரணமான பாணிதான் அவருடைய அடையாளமாக இருந்தது. 'எதிர்ப்பின் மனச்சோர்வு' (The Melancholy of Resistance) போன்ற இவரது படைப்புகளில், இந்த நீண்ட வாக்கியங்கள் வாசகனை ஒரு தொடர்ச்சியான சிந்தனை ஓட்டத்தில் மூழ்கச் செய்கின்றன.

உலகம் முழுவதும் எளிமையைத் தேடும்போது, தன் கலையின் ஆழத்தை மட்டுமே நம்பி இருந்த இந்தக் கலைஞனின் வெற்றி நமக்கு உணர்த்துவது: சாதாரணமான பாதையில் செல்லத் துணியாமல், நமது தனித்துவத்தை உரக்க வெளிப்படுத்துவதுதான் ஆகும்.

இந்த நோபல் பரிசு கிராஸ்னஹோர்காய்க்கு முதல் வெற்றி அல்ல. அவர் தனது படைப்புகளுக்காக 2015-ஆம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேசப் பரிசைப் பெற்றார். அதன் பிறகு 2019-ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய புத்தக விருது (National Book Award) உட்படப் பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். மேலும், ஹங்கேரிய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பேலா டார், கிராஸ்னஹோர்காயின் நாவல்களைத் திரைப்படங்களாக மாற்றியுள்ளார்.இதன் மூலம், அவரது கலைப்பயணம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.

"நான் பேரழிவு பற்றி எழுதுகிறேன், ஏனென்றால் அதிலிருந்து எது பிழைத்து வாழ்கிறது என்று நான் இன்னும் நம்புகிறேன்" என்ற அவரது கூற்று, நாம் இருண்ட தருணங்களில் இருந்தாலும், உண்மையான நம்பிக்கை மற்றும் கலை எப்போதும் பிழைத்திருக்கும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. லாஸ்லோ கிராஸ்னஹோர்காயின் இந்தப் பயணம், உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் அனைத்து எழுத்தாளருக்கும்ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றால் அது ஒரு மிகையான கூற்று இல்லை.

இதையும் படியுங்கள்:
இந்திய ரயில்வே எச்சரிக்கை: மழைக்காலத்தில் தண்டவாளங்களுக்கு அருகில் குடையை பயன்படுத்தக் கூடாது!
hungarian writer laszlo receives nobel prize for literature

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com