“நான் ஒரு ஏலியன்...” – எலன் மஸ்க்!

Elon Musk and Alien
Elon Musk

விவா டெக் நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய எலன் மாஸ்க், “நான் ஒரு ஏலியன்தான். ஆனால் யாரும் அதை நம்பவில்லை.” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் பாரீஸில் நடந்த விவா டெக் நிகழ்வில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் கலந்துக்கொண்டார். அப்போது அந்த நிகழ்வின் தொகுப்பாளர், “நீங்கள் ஒரு வேற்றுகிரகவாசி என்று சிலர் நம்புகிறார்கள்.” என்று கூறினார். அதற்கு சிரித்துக்கொண்டே எலன் மஸ்க், “ஆம்.. நான் வேற்றுகிரக வாசிதான்.

ஆனால், யாரும் என்னை நம்ப மறுக்கிறார்கள்.” என்று நகைச்சுவையாகப் பேசினார். அப்போது அவர் மேலும் இதுகுறித்து பேசினார். அதாவது, “எப்போதாவது, வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் எனக்குக் கிடைத்தால், அதனை உடனே X தளத்தில் பதிவிடுவேன்.” என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து தொகுப்பாளரின் கேள்விகளுக்கு விளக்கமாக பேசிய அவர், “நான் ஒரு வேற்றுகிரகவாசிதான். இதை சொல்லிக்கொண்டே வருகிறேன். ஆனால் யாரும் என்னை நம்பவில்லை. ஏலியன்கள் பூமியில் இருப்பதாக நினைக்கிறீர்களா என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். இதுவரை வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை.

இதையும் படியுங்கள்:
Isreal Rafa war: இஸ்ரேலின் கொடூர தாக்குதல்… 35 பேர் பலி!
Elon Musk and Alien

ஆதாரம் கிடைத்தால் அதை எக்ஸ் தளத்தில் வெளியிடுவேன். மனிதர்கள் பல கிரகங்களில் வாழவேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ்சின் நீண்ட கால இலக்கு. ஒரு நிலையான பல கிரக நாகரிகமாக மாற வேண்டும். அவ்வாறு செய்வது சாத்தியமாகும்போது, பூமியின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும்." என்றார்.

மேலும் AI தொழில்நுட்பம் குறித்து அவர் பேசுகையில், “AI தொழில்நுட்பம் வளர்ந்தால், அனைவருக்குமே வேலை இருக்காது. அதற்காக இது ஒரு தவறான வளர்ச்சி என்று கூறவில்லை. நீங்கள் ஒரு வேலையை பொழுதுபோக்காகவும் அன்போடும் செய்வீர்கள். ஆனால், AI தொழில்நுட்பம் அப்படியல்ல. அது சேவையாகவே செய்யும்.” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com