நேற்றிரவு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருக்கிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டத்தால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் கூட, ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் தரப்பு அதனைப் பற்றி வாயையே திறக்கவில்லை. அதேபோல், பாலஸ்தீனம் ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது. இந்தியா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்குப் பதிவிட்டது. ஆனால், அமெரிக்கா பாலஸ்தீனத்திற்கு எதிராக வாக்குப்பதிவிட்டது.
இதனையடுத்து ரஃபாவில் இஸ்ரேல் மோசமான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது. காசாவின் உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீன மக்கள் ரஃபா நோக்கிதான் நகர்ந்தனர். பின்னர், இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை திட்டமிட்டப்படி தொடங்கியது.
இதனையடுத்து சமீபத்தில், 8 லட்சம் பேர் ரஃபா பகுதியிலிருந்து போர் நடந்து முடிந்த பகுதிகளுக்குச் சென்றனர். போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இப்படி இருக்கையில் நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை நடத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட 8 ராக்கெட்டுகளை வீசியிருக்கிறது. எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு அதிகாரிகள் உட்பட 35 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பெண்கள், குழந்தைகள் என பலரும் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.