நான் எனக்கு ஓட்டு கேட்கவில்லை! உங்களுக்காக ஓட்டு கேட்கிறேன் - சீமான்..!!

Seeman Speech
Seeman propoganda Twitter
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் ஓயப் போகும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இங்கே படித்தவனுக்கு மதிப்பு இல்லை நடிகனுக்கு மட்டும்தான் மதிப்புள்ளது. நீங்கள் நடிகனை நாடாளக் கூப்பிடுகிறீர்கள். இதனால் படித்தவனுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

நீங்கள் அனைவரும் படித்த பிள்ளைகள் நீங்கள் நினைத்தால் மகத்தான ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். நீங்கள் நடிகனை நினைத்து, அரிதாக மண்ணில் பிறந்த மகத்தான தலைவர் நல்லகண்ணுவை மறந்து விட்டீர்கள். அவரை சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தீர்கள் பாராளுமன்ற தேர்தலிலும் தோற்கடித்தீர்கள். விடுதலைக்காக போராடாத ஒருவரை 25 ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்தி மெரினாவில் அமர்த்தி உள்ளீர்கள்.

என் அன்பு பெற்றோர்களே! நான் எனக்காக ஓட்டு கேட்கவில்லை உங்களுக்காக ஒட்டு கேட்கிறேன். என் வெற்றி என் வெற்றி அல்ல! நீங்கள் கை சின்னத்திற்கு மாங்குடிக்கு ஓட்டு போட்டீர்கள். நீங்கள் தோற்றீர்கள், கார்த்திக் சிதம்பரத்திற்கு ஓட்டு போட்டீர்கள் அவர் வென்றார் நீங்கள் தோற்றீர்கள்.

பா.சிதம்பரம் இங்கே வெற்றி பெற்று மூன்று முறை மத்திய அமைச்சராக பதவி வகித்தார். ஆனால், யாருக்கும் காரைக்குடி என்ற ஒரு ஊர் இருக்கிறது என்பதே தெரியாது.என்று பேசி இருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com