“நான் மனிதனே அல்ல…” – பிரதமர் மோதி!

Narendra Modi
Narendra Modi

இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஒரு நேர்க்காணலில் பேசியதுதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இவர் தன்னை ஒரு துறவு நிலையிலும், கடவுளின் தூதுவன் என்ற வகையிலும் கட்டமைத்து வருவது அவர் மன மாற்றங்களின் அறிகுறியா? அல்லது தேர்தல் சமயம் என்பதாலா? என்று அரசியல் வட்டாரத்தில் பல கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக மூன்றாவது முறையாக வென்று ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறது. அந்தவகையில், பிரதமர் மோதி மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து அவர் தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்து வருகிறார்.

சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக வாரணாசி கங்கை நதியில் நீராடி பூஜை செய்த பிரதமர் மோதி, தான் கங்கை நதியை தாயாக பார்ப்பதாகவும், தன் தாயின் இழப்பிற்கு பிறகு கங்கைத் தன்னை மகனாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் உணர்ச்சி மிகுந்து பேசியிருந்தார்.

அந்தவகையில், தொலைக்காட்சி நேர்க்காணல் ஒன்றில் பேசிய நரேந்திர மோதி, “என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.

சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக ஒரு மனிதாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.” என்று பேசியிருக்கிறார்.  

இதையும் படியுங்கள்:
நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்… ஒருவர் பலி!
Narendra Modi

இதனையடுத்து இந்த வீடியோதான் தற்போது காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது. இவர் தன்னைத் துறவி நிலையிலும், இறைவனின் தூதுவன் என்றும், இறை பக்தியை வெளிப்படையாக காண்பிப்பதும், மத ரீதியானப் பிரிவினையை தூண்டுவது போல இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் இப்படி பேசுவது, அரசியலாக கருதுவதா? அல்லது அவருடைய மாற்றமாக கருதுவதா? போன்றக் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com