உடனே விண்ணப்பீங்க..! இந்திய விமானப் படையில் சேர வாய்ப்பு...340 காலிப்பணியிடங்கள்..!

IAF Recruitment
IAF Recruitment source:zee news
Published on

விமானப்படையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்திய விமானப்படையில் Flying Branch மற்றும் Ground Duty (Technical மற்றும் Non-Technical) பிரிவுகளில் உள்ள 340 பணியிடங்களை நிரப்ப AFCAT தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மேலும் இப்பணியிடங்களுக்கு நவம்பர் 17 முதல் விண்ணப்பம் தொடங்கி டிசம்பர் 14 வரை பெறப்படுகிறது.

வேலை பிரிவு : மத்திய அரசு வேலை 2025

துறைகள் : இந்திய விமானப்படை

காலியிடங்கள் : 340

பணி : Flying Branch மற்றும் Ground Duty

கடைசி தேதி : 14.12.2025 at 11.30 PM

பணியிடம் : இந்தியா முழுவதும்

காலிப்பணியிடங்களில் விவரம் :

பிரிவு எண்ணிக்கை

பறக்கும் பணி 38

தரைத்தளப் பணி (தொழில்நுட்பம்) 188

தரைத்தளப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) 114

மொத்தம் 340

கல்வித் தகுதி:

Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றி இருக்க வேண்டும். உயர்கல்வியில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Ground Duty (Technical) பணியிடங்களுக்கு தொழில்நுப்ட பிரிவில் தரைத்தளப் பணிக்கு எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆரோனாட்டிக்கல், கணினி அறிவியல், கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்த பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Ground Duty Non Technical : தொழில்நுட்பம் அல்லாத தரைத்தளப் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, பி.காம், CA/ CMA/ CS/ CFA, முதுகலை பட்டப்படிப்பு ஆகியவற்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

Flying Branch AFCAT and NCC Special Entry பணிகளுக்கு:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 வயது ஆகும்.

  • அதேபோல், அதிகபட்ச வயது வரம்பு 24 வயது ஆகும்.

  • விண்ணப்பதாரர்கள் 02 ஜனவரி 2001 முதல் 01 ஜனவரி 2007 வரை (இந்த இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.

Ground Duty (Technical & Non-Technical) பணிகளுக்கு:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 வயது ஆகும்.

  • இந்த பணிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 வயது ஆகும்.

  • விண்ணப்பதாரர்கள் 02 ஜனவரி 2001 முதல் 01 ஜனவரி 2007 வரை (இந்த இரண்டு தேதிகளும் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்த இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பதாரர்கள் இரண்டு முக்கிய கட்டங்களைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். அவை எழுத்துத் தேர்வு மற்றும் SSB தேர்வு (SSB Test) ஆகும். மேலும் விரிவான மற்றும் துல்லியமான தேர்வு செயல்முறைக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனமாகப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.550/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • கட்டண முறை: கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17.11.2025

ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.12.2025

எப்படி விண்ணப்பிப்பது:

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.11.2025 முதல் 14.12.2025 தேதிக்குள் https://afcat.cdac.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இனி டாக்டர் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்தை வாங்க முடியாது..!
IAF Recruitment

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com