
ஐபிஎம் (IBM) என்பது இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன் (International Business Machines Corporation) என்ற பன்னாட்டு கணினியியல் நிறுவனமாகும். முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம் வன்பொருள், மென்பொருள், குமிழ்தகவல் (cloud) சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற பல்வேறு கணினி தொடர்பான தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். சமீபத்தில், இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களால் (automation) மனிதவளத் துறையில் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
அந்நிலையில் இந்நிறுவனம், புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் கொச்சியில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி - சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer)
படிப்பு - டிகிரி முடித்தவர்கள், கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு இணையாக படித்தவர்கள், மற்றும் கல்லூரியில் கடைசி ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
தகுதிகள் - programming language Go, Java, Python, ஸ்கிரிப்ட்டிங் லேங்குவேஜ், front end development react, Redux, AngularJS, JavaScript, HTML, CSS தெரிந்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதிகள் - GitHub, Cloud Platform (IBM Cloud, AWS, Azuer, GCP), DevOps டூல்ஸ் மற்றும் பிராக்டீஸ், Kubernetes Docker அல்லது Openshift, Linux Systems, Automation Frameworks, Data Science Concepts அல்லது Cloud architecture தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம் - தேர்வாகும் நபர்களுக்கு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
மேலும் இது குறித்து விவரங்கள் அறிய https://ibmglobal.avature.net/en_US/careers என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் தேர்வாகும் நபர்கள் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
உங்களது விண்ணப்பங்களை https://ibmglobal.avature.net/en_US/careers என்ற இணையதள முகவரிக்கு சென்று அதில் Search jobs by keywordல் Software Develope என்று டைப் செய்தால் Software Engineering Software Developer என்ற ஆப்ஷன் வரும். அதில் பல மாநிலங்களின் பெயர்கள் வரும். அதில் Professional-ல் Kochi, Kerala என்று வரும் ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் கொச்சியில் உள்ள ஐபிஎம் நிறுவனத்திற்கு தான் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.