தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 385 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
பணியிடங்கள்:
ஓட்டுநர் (ஜீப் டிரைவர்)
பதிவறை எழுத்தர்
அலுவலக உதவியாளர்
இரவு காவலர்
காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்கள்:
நீலகிரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், திருப்பூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருவாரூர், சிவகங்கை, சேலம், ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி, தர்மபுரி, தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், புதுக்கோட்டை, தென்காசி, வேலூர் ஆகிய இடங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால், இந்த மாவட்டங்களில் விருப்புமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
இந்த வேலைகளுக்கு மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 15,700 முதல் அதிகபட்சமாக ரூ. 71,900 வரை வழங்கப்படும்.
முக்கியத் தகுதிகள்:
வயது: 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 வயது வரையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 வயது வரையும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இரவு காவலர்: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.
ஜீப் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதிகள்:
அலுவலக உதவியாளர்: சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர்: ஓட்டுநர் உரிமத்துடன் 5 வருட அனுபவம் தேவை.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ளவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது, கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் (ஓட்டுநர் பதவிக்கு), அனுபவச் சான்றிதழ், புகைப்படம், மற்றும் கையொப்பம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
கடைசித் தேதி:
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 30.09.2025. எனவே, காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.