மாலத்தீவு: முய்சுவின் அதிபர் பதவிக்கு வந்த புதிய சிக்கல்... பதவியில் நீடிப்பாரா?

Mohammed Muizzu
Mohammed Muizzu

மாலத்தீவு அதிபரான முகமது முய்சுவின் மேல் தற்போது ஒரு பெரிய ஊழல் புகார் எழுந்துள்ளதால், எதிர்க்கட்சிகள் உடனே அவரைப் பதவி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், முய்சுவின் அதிபர் பதவிக்கு ஒரு பெரிய சிக்கல் வந்துள்ளது.

முகமது முய்சு மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றதிலிருந்தே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோசமான உறவு இருந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான அவரது முடிவுகள், மாலத்தீவின் உயர் அதிகாரிகளுக்குக் கூட பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு உள்ளூரிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. இந்தநிலையில் தற்போது முய்சுவின் மீது மிகப் பெரிய ஊழல் புகார் ஒன்று எழுந்துள்ளதால், அவர் பதவியிலிருந்தே கூட நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மாலத்தீவில் அதிபர் ஆட்சியே நடைமுறையில் இருந்து வரும் நிலையில், சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, முய்சு அதிபராகப் பதவியேற்றார்.

அந்தவகையில், இப்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் 21ம் தேதி மாலத்தீவில் நடைப்பெறவுள்ளதால், அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியின் மாலத்தீவு ஜனநாயக கட்சியும் மாறி மாறி குற்றஞ்சாட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தான் கடந்த திங்கட்கிழமை, மாலத்தீவு போலீஸின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மாலத்தீவு நாணய ஆணையம் ஆகியோரின் சீக்ரெட் ஆவணங்கள் இணையத்தில் கசிந்தன.  இந்த ஆவணங்கள் முய்சுவின் ஊழலுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக உள்ளூர் பத்திரிக்கைகள் கூறுகையில், “இவை 2018ம் ஆண்டு தேதியிட்ட ஆவணங்களாகும். இவை அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள முறைக்கேடுகளைக் காட்டுகின்றன. குறிப்பாக இதில் 10 பரிவர்த்தனைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகையால், நிதி மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.”

இந்த ஆவணங்கள் இணையத்தில் கசிந்ததிலிருந்து, இவை மாலத்தீவில் ஒரு பெரும் புயலாக மாறியுள்ளது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகள் அந்த ஆவணங்களைக் காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த சீக்ரெட் ரிப்போர்ட்டை ஆதாரமாக வைத்து, உடனே முகமது முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
ரே பரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக நிற்கப்போவது யார்? தொடரும் சஸ்பென்ஸ்!
Mohammed Muizzu

மாலத்தீவில் இந்தளவு ஒரு சென்சிட்டிவான ஆவணம் கசிந்துள்ளது இதுவே முதல்முறை. இதுத்தொடர்பாக அரசோ அல்லது எந்த ஒரு அமைப்போ வாயையே திறக்கவில்லை.

ஒருவழியாக நேற்று முய்சு இதுத்தொடர்பாக பேசினார். அதாவது, எதிர்க்கட்சிகள் தங்களை சிக்கவைக்க முயல்வதாகவும், ஆனால் இல்லாத ஊழலை நிரூபிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை  21ம் தேதி நடைபெறும் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றிபெற்றால், அவர்கள் முய்சுவிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com