அரசு ஊழியர்கள் கவனத்திற்கு..! முதல் மனைவி இருக்கும்போது 2-வது திருமணம் செஞ்சா ஓய்வூதியம் கட்..!

court
court
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

முதல் மனைவி உயிருடன் இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல அந்த திருமணம் செல்லாது என்பதுதான் பொதுவான சட்டம். அதுவே கணவனின் முதல் மனைவி இறந்து விட்டாலோ அல்லது விவாகரத்து செய்திருந்தாலோ இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் எதுவும் இல்லை. ஆனால், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். இவர் 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் தன்னுடைய முதல் மனைவி வசந்தா உயிருடன் இருக்கும் பொழுதே இரண்டாவதாக ரேவதி என்பவரை 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2009-ஆம் ஆண்டு தனது இரு மனைவிகளின் பெயர்களையும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அவர் அளித்த கோரிக்கை மனுவை அரசு நிராகரித்தது.

இதை எதிர்த்து ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது மனுதாரரின் முதல் மனைவி 2020 ஆம் ஆண்டு இறந்து விட்டதால் அவருடைய இரண்டாவது மனைவியை ஓய்வுதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி இரண்டாவது மனைவியின் பெயரை சேர்க்க உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அக்கவுண்டன்ட் ஜெனரல் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட குழு வழங்கிய தீர்ப்பு - முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது மனைவியை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் ஓய்வூதியம் என்பது ஒரு நலத்திட்டம் என்பதால் இதனை பெறுவதற்கான தகுதி என்பது மிகவும் முக்கியமானது. அரசுப் பணியாளர்கள் விதிப்படி முதல் மனைவி இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்வதை தமிழ்நாடு அரசு தடை செய்கிறது. இது குற்றம் என்பதுடன் இந்த செயல் செய்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

மேலும், மனுதாரருடைய இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால், முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் அதிரடித் தீர்ப்பளித்தனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஒரே நாளில் ரூ.5,000 மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி!
court
logo
Kalki Online
kalkionline.com