உக்ரைன்ல இருக்கீங்களா? உடனே வெளியேறுங்க: இந்திய தூதரகம்!

உக்ரைன்ல இருக்கீங்களா? உடனே வெளியேறுங்க: இந்திய தூதரகம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடங்கி, இப்போது தீவிரமடைந்துள்ளது.  

உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக  ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் ராணுவ தள்வாடங்களை கொடுத்து வருகின்றன. இதையடுத்து ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு, உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com