

சிறு சேமிப்பு என்றாலே அன்று அனைவருக்கும் புகலிடமாக இருந்தது போஸ்ட் ஆபீஸ் தான். நாளடைவில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் சேமிப்புகளை பங்கு போட்டுக்கொண்டது. ஆனால் இன்றும் தங்கள் கணவர் தரும் மாதாந்திர செலவுப் பணத்தில் மீதம் பிடித்த சிறுவாட்டு பணத்தை சேமிக்க அவசரத்துக்கு உதவும் மனைவிமார்கள் அதை பாதுகாக்க போஸ்ட் ஆபீஸ் தான் உதவுகிறது.
இந்தியாவின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள் (Post Office Saving Schemes) என்பது அரசே நேரடியாக நடத்தும் பாதுகாப்பான மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்கும் வசதி கொண்டவை. . பொதுவாக, பாதுகாப்பான முதலீடு என்றால் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். இதற்கு காரணம், இங்கு முதலீடு செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், இதற்கு அரசாங்க உத்தரவாதம் உள்ளது.இதனால் தான் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் ஜீரோ ரிஸ்க் சேமிப்பு திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றது.
Post Office Savings Account, Recurring Deposit (RD),Time Deposit (Fixed Deposit), Post Office Monthly Income Scheme (MIS), Senior Citizen Savings Scheme (SCSS), Public Provident Fund (PPF) என பல திட்டங்கள் இருந்தாலும் அதில் அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்து சேமிப்பதே சிறந்தது.
அதில் ஓர் திட்டம் தான் தபால் நிலைய ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம். தினம் 333 ரூபாய் சேமிப்பு மூலம் (மாதம் சுமார் ₹10,000) சேமித்து, 10 ஆண்டுகளில் சுமார் ₹17 லட்சம் வரை பெற முடியும். 6.7% - 6.8% வட்டி விகிதத்தில், இந்த 10 ஆண்டு காலத் திட்டத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்து லட்சாதிபதியாகலாம். இதில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 6.7% வட்டி விகிதத்தில் சுமார் ₹7.14 லட்சம் வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் பாதுகாப்பான அரசுத் திட்டம் மட்டுமல்ல இதில் கடன் பெறும் வசதியும் உள்ளது சிறப்பு.
நீங்கள் தினமும் 333 ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு வருடத்தில் உங்கள் வைப்புத் தொகை 1.20 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த வழியில், 5 ஆண்டுகளில் மொத்த வைப்புத் தொகை 5,99,400 ஆக இருக்கும். அதன் மீது உங்களுக்கு 1,15,427 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் உங்களின் மொத்தத் தொகை 7,14,827 ரூபாயாக இருக்கும்.
உங்கள் முதலீட்டை 5 ஆண்டுகள் நீட்டித்தால், 10 ஆண்டுகளில் உங்கள் வைப்புத் தொகை 12,00,000 ரூபாயாக இருக்கும். இதற்கு உங்களுக்கு சுமார் 5,08,546 ரூபாய் வட்டியும் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய மொத்தத் தொகை 17,08,546 ரூபாயாக மாறும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் தவணை செலுத்துவது கட்டாயமாகும். நீங்கள் அவ்வாறு செலுத்தாவிட்டால் ஒரு மாத தவணையை டெபாசிட் செய்யாததற்காக 1% அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து நான்கு தவணை செலுத்தாமல் விட்டால் கணக்கு மூடப்படும்.
இவை முக்கியமாக பாதுகாப்பு மற்றும் உத்திரவாதமான வட்டியுடனும், சிலவற்றில் வரி (tax) பயன்களுடனும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு scheme- ஸ்கீம்க்கும் வட்டி விகிதம் (interest rate)-ஐ அரசு நாலாண்டுக்குச் (quarterly) சரிபார்ப்பது சிறப்பு.
இத்திட்டத்தில் சேர்வதும் எளிதானதே. அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி படிவம் பெற்று விபரங்களை பூர்த்தி செய்யவும். ஆதார், பான், முகவரி ஆதாரம் நிச்சயம் தேவை. உடனடியாக கணக்கு வைப்பைத் தொடங்கலாம். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்த திட்டத்தில் கணக்கை திறக்கலாம். குழந்தைகளின் பெயரில் கூட கணக்கை திறக்கலாம்.
ஒவ்வொரு நாளும் ரூ.333 சேமிப்பதன் மூலம் எதிர்கால வாழ்வைப் பாதுகாக்க ஒரு பெரிய நிதியை உருவாக்கலாம். நிலையான வட்டி விகிதம் மற்றும் அரசாங்க உத்தரவாதம் ஆகியவை இந்த திட்டத்தை மிகவும் நம்பகமானதாக ஆக்குகிறது. எனவே, எதிர்காலத்திற்கான பாதுகாப்பான மற்றும் வலுவான நிதித் திட்டத்தை உருவாக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக தபால் அலுவலக RD திட்டத்தை பரிசீலிக்கலாம்
சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது என்பது இதுதான். நம்முடைய சிறிய முதலீடுகள் பின்னாளில் பெரும் லட்சங்களை தந்தால் மகிழ்ச்சி தானே?