தங்கத்தை வீழ்த்திய வெள்ளி: 2025-ல் வெள்ளி 1 கிலோ வாங்கியிருந்தால் இன்று ₹3.28 லட்சம்! ஒரே ஆண்டில் 228% லாபம்!
தங்கம் சிறந்த முதலீடு என மக்களால் கருதப்படுவதாலும், தங்கம் சுபமான பொருள் என மக்களால் நம்பப்படுவதாலும் அதற்கு கடும் டிமாண்ட் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், சிலரின் கவனம் அப்படியே வெள்ளியின் பக்கம் திரும்பியிருக்கிறது. வெள்ளியும் கடந்த சில மெதுவாக உயர்ந்து வந்தாலும் கடந்தாண்டு (2025) எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடுமையான விலை ஏற்றத்தை கண்டியிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தங்கத்துக்கு நிகரான அளவில் வெள்ளி விலை உயர்வது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்று வியாபாரிகளும், பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
தங்கம் முதலீடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெள்ளி முதலீடு மட்டுமன்றி, தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி வெறும் ஆபரணமாக மட்டுமல்ல, இயந்திரங்கள், ரோபோட்கள், செல்போன்கள், அவ்வளவு ஏன் மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் கார்களில் வெள்ளி இருக்கிறது.
உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்றதன்மையால் வெள்ளி ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
சூரிய சக்தி தகடுகள் (solar panels) மற்றும் பிற தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான தேவையும் வெள்ளியின் விலையை உயர்த்துகிறது.
வெள்ளியின் தேவை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும், விலை உயர்வுக்குக் காரணமாகியிருக்கிறது என்பதை அறிய வேண்டும். வெள்ளியின் விலை இந்தளவிற்கு உயர்ந்து வரும் சூழலில், தங்கத்தில் முதலீடு செய்ய முடியாதவர்கள், எதிர்கால முதலீட்டிற்கு வெள்ளியும் சிறந்த ஆப்ஷன் என எண்ணி பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13,000 -ஐ கடந்துள்ளதால் சாதாரண மக்களுக்கு தங்கம் வாங்குவது மிகவும் கடினமாகியுள்ளது. முன்பு பெரும்பாலானோர் வெள்ளி நகைகளை விரும்பாமல் இருந்தாலும், தற்போது தங்கம் விலை ஏற்றத்தால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியை வாங்க முனைப்பு காட்டுகின்றனர். இதனால், விலை மேலும் உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
2025 புத்தாண்டு அன்று (ஜனவரி 1) ஒரு கிராம் 93 ரூபாயாக இருந்த வெள்ளி, நாள்தோறும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என ஏறிக்கொண்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு தங்கத்தை போட்டியாக உயர்ந்து கொண்டே வந்து டிசம்பரில் ஒரு கிராம் ரூ.285க்கும், ஒரு கிலோ ரூ.2.74 லட்சம் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாமானிய மக்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒரே ஆண்டில் 200 மடங்குக்கும் அதிகமான விலை ஏற்றத்தைக் கண்டிருக்கிறது வெள்ளி.
நீங்கள் கடந்தாண்டு (2025) ஜனவரியில் வெள்ளி வாங்கியிருந்தால், 2026 ஜனவரி மாத நிலவரப்படி அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கும். 2025 தொடக்கத்தில் (ஜன 1, 2025) கிலோ சுமார் ரூ.79,352.54 - ரூ.87,578 வரை இருந்த வெள்ளி விலை, 2026 ஜனவரி 14-ம்தேதி ஒரு கிலோ ரூ.3.07 லட்சம் வரை சென்றிருக்கிறது. அதாவது 2025 முழுவதும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது, சுமார் 160% முதல் 228% வரை வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம் 2025 டிசம்பர் 31-ம்தேதி வெள்ளி விலை கிலோ ₹2,06,160.55 வரை உயர்ந்து சுமார் 160% வளர்ச்சியை கண்டது.
அதுவே நீங்கள் கடந்தாண்டு (2025) ஜனவரியில் ரூ.1 லட்சத்திற்கு வெள்ளி வாங்கியிருந்தால், இந்தாண்டு (2026) ஜனவரியில் அதன் மதிப்பு ரூ.2.6 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்திருக்கும் (இது தோராயமான கணக்கு). சுருக்கமாக, 2025-ல் வெள்ளி வாங்கிய முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்திருப்பார்கள் என்றோ சொல்லலாம்.
கடந்த 2020 ஜனவரியில் ஒரு கிலோ வெள்ளி வெறும் ரூ.39,000-க்கு மட்டுமே விற்பனையான நிலையில், இப்போது 7 மடங்கு விலை உயர்ந்து 2026 ஜனவரி 14-ம்தேதி ஒரு கிலோ ரூ.3.07 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 24,000 மடங்கு வெள்ளி விலை உயர்ந்திருக்கிறது. 5 ஆண்டுகளில் 330 சதவிகிதம். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகம் என்று கூறுகின்றனர் பொருளாதார வல்லூநர்கள்.
கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,65,000 ஆக இருக்கும் போது நீங்கள் 3 கிலோ வெள்ளி வாங்கி இருந்தால் அதன் விலை ரூ.4,95,000 ஆகும். அதுவே 2050-ம் ஆண்டில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 31,25,295 ரூபாயாக இருக்கும் என KAG Price Prediction தெரிவிக்கிறது. அப்படி பார்த்தால் 2050-ம் ஆண்டில் நீங்கள் 3 கிலோ வெள்ளியை வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என கணிக்கப்படுகிறது.
வரும் காலங்களில் தங்கத்தில் முதலீடு செய்வதை விட வெள்ளியில் முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும் என கணித்து நடுத்தர மக்கள் அதிகளவில் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர்.
நீண்டகால முதலீட்டை நோக்கிப் பயணிப்பவர்கள் முடிந்தவரை இப்போதே 999 காரட் வெள்ளி நாணயமாகவோ அல்லது நல்ல பொருளாதார வல்லுநரின் வழிகாட்டுதலின் படி சில்வர் ETF-களாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
கடந்தாண்டு வெள்ளிக்கு மிகப் பெரிய ஏற்றமான ஆண்டாக இருந்தாலும், பொருளாதார நிபுணர் கோல்டுமேன் சாச்சும் இந்தாண்டிலும் தங்கம் - வெள்ளியின் விலை பிரகாசிக்கும் என்று சூசகமாகக் கூறியிருக்கிறார்.
மற்றொரு முக்கியமான விஷயம், தங்கம் ஓரளவுக்கு நிலையான வளர்ச்சியைத் தரும். ஆனால், வெள்ளி சந்தை மிக வேகமாக ஏறும், அதேபோல் வேகமாக இறங்கவும் வாய்ப்புள்ளது. 2025-ல் வெள்ளி ஒரு மிகப்பெரிய 'வெல்த் கிரியேட்டராக' (Wealth Creator) உருவெடுத்துள்ளது. உங்கள் முதலீட்டுத் தொகுப்பில் (Portfolio) ஒரு பகுதியை வெள்ளியில் வைத்திருப்பது நல்ல லாபத்தைத் தரக்கூடும், ஆனால் அதன் ஏற்ற இறக்கங்களைப் புரிந்து முதலீடு செய்வது அவசியம்.

