Sim Cards
Sim Cards

10 சிம்கார்டுகள் வைத்திருந்தால், மூன்று ஆண்டுகள் சிறை!

Published on

ஒரு நபர் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால், அவருக்கு அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

ஒரு நபர் ஏராளமான சிம் கார்டுகள் வைத்திருந்தால், அதனை தவறான  வழிகளில் பயன்படுத்துகின்றனர். இதனால், குற்றங்களும் நடக்கின்றன. சிம்கார்டுகளை பயன்படுத்தி, அந்த குற்றத்தை செய்து முடித்தவுடன் அதனை தூக்கி போட்டுவிடுகின்றன. இதனால் போலீஸாருக்கும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. அதிகளவு சிம்கார்டுகள் பயன்படுத்துவதால், குற்றங்கள் அதிகரிப்பதையும், அதனை கண்டுபிடிப்பதிலும் கண்காணித்து வந்த அரசாங்கம், இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தது.

அதாவது ஒருவர் அதிகபட்சம் 9 சிம்கார்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும், 10 அல்லது அதற்கும் மேல் பயன்படுத்தினால், 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுவும் சில மாநிலங்களில் அதைவிடவும் நெருக்கடியான சட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதாவது அசாம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சம் 6 சிம்கார்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதேபோல் வேறு ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி சிம்கார்டுகளைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜோ பைடனுக்கு கொரோனா… மீண்டும் மீண்டுமா?
Sim Cards

சிம்கார்டுகள் மட்டுமின்றி, சட்டவிரோதமாக வயர்லெஸ் கருவி வைத்திருந்தாலும், செய்திகளை பயனாளிகளின் அனுமதியின்றி அனுப்பினாலும், அந்த நிறுவனத்துக்கு ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சேவைகளை வழங்கத் தடையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சைபர் குற்றங்களை அதிகளவு தடுக்க முடியும். அதேபோல் போலீஸார்களுக்கு வேலை குறையும். ஆனால், இப்படியொரு சட்டத்தினால், குற்றம் செய்பவர்கள் வேறு வழியில் குற்றங்கள் செய்ய முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால், குற்றங்களை குறைப்பதற்கு இது வெறும் முதல்படி என்றே கூற வேண்டும். இதனால், சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com