

2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சுமுகமாக சென்று சேரும் வகையில், தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கின.
இந்தத் தொகுப்பில் ₹3,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி மற்றும் சேலைகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கலுக்கு முன்பாக விநியோகிக்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கும் பணி இன்று (ஜனவரி 8) முதல் தொடங்கியுள்ளது. இதற்கான டோக்கன்கள் கடந்த சில நாட்களாக வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டன. இருப்பினும், சில காரணங்களால் டோக்கன் கிடைக்காத பயனாளிகள் என்ன செய்வது? என்ற கேள்வி எழக்கூடும்.
நியாய விலைக் கடை ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு டோக்கன் வழங்க வந்தபோது, நீங்கள் வீட்டில் இல்லாத சூழல் இருந்தால், அந்த டோக்கன்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கே கொண்டு செல்லப்படும். எனவே, உங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கு டோக்கன் கிடைத்தும், உங்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை என்றால் பதற்றமடையத் தேவையில்லை.
டோக்கன் கிடைக்காதவர்கள் உடனடியாகத் தங்களின் குடும்ப அட்டையுடன் (Ration Card) தங்களுக்குரிய நியாய விலைக் கடைக்குச் சென்று ஊழியர்களிடம் விவரத்தைக் கூறலாம். அங்கு உங்களுக்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த டோக்கனில் நீங்கள் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்திற்குச் சென்று நெரிசலின்றி பொருட்கள் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்துத் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் எவ்விதத் தடையுமின்றி 3,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் சீர் வரிசைகள் போய்ச் சேருவதை உறுதி செய்யத் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைவரும் பயன்பெறவும் இந்த டோக்கன் முறை மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது.
நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்க வரும்போது, வீட்டில் யாரும் இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கலாம். அத்தகைய நேரங்களில், உங்கள் பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் நடைபெறுவதை அறிந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று ஊழியர்களிடம் விவரத்தைக் கூறி டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம்."
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்துத் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் எவ்விதத் தடையுமின்றி 3,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் சீர் வரிசைகள் போய்ச் சேருவதை உறுதி செய்யத் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைவரும் பயன்பெறவும் இந்த டோக்கன் முறை மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து பயனாளிகளுக்கும் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு அளிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.