உடனே விண்ணப்பீங்க..! இந்திய வானிலை ஆய்வு மையத்தில் உதவியாளர் வேலை..!
நிறுவனம் : India Meteorological Department (IMD)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 134
பணியிடம் : இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் : 24.11.2025
கடைசி நாள் : 14.12.2025
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 2025ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது காலியாகவுள்ள 134 Admin. Assistant, Project Scientist (I, II, III, E), மற்றும் Scientific Assistant போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இதுவாகும். எனவே, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் 14.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள் :
Project Scientist (I, II, III, E) - 107
Scientific Assistant - 25
Admin. Assistant - 02
1. பதவி: Project Scientist I
சம்பளம்: Rs.56,000 – 1,23,100/-
காலியிடங்கள்: 107
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் M.Sc. (இயற்பியல்/ கணிதம்/ வானிலையியல்/ வளிமண்டல அறிவியல்/ மின்னணுவியல்/ கணினி அறிவியல்) அல்லது B.Tech. / B.E. (குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர் நிலை Project Scientist பதவிகளுக்கு அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Scientific Assistant
சம்பளம்: Rs.29,200/-
காலியிடங்கள்: 25
கல்வி தகுதி: Bachelor’s Degree in Science (Physics) / Computer Science / Computer Applications / Electronics / ECE / Instrumentation / IT / Telecommunication / Communication Engineering
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Admin. Assistant
சம்பளம்: Rs.29,200/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு (Computer skills) அவசியம்.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு, 24.11.2025 முதல் 14.12.2025 தேதிக்குள், https://internal.imd.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, அங்கே உள்ள “Project Staff Registration Link” என்ற பட்டனைக் கிளிக் செய்து, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

