ஜப்பானில் ஆறு மாதங்களில் 40 ஆயிரம் பேர் தனிமையில் வாடி உயிரிழப்பு!

Oldage people in Japan
Oldage people in Japan
Published on

இந்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர்கள் தனிமையில் வாடி இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

தனிமையில் இருப்பதை இளைஞர்களே விரும்பமாட்டார்கள். விரும்பமாட்டார்கள் என்று சொல்வதைவிட இருக்க இயலாது என்று சொல்வது பொருத்தமானது. ஏனெனில், தனிமையில் இருக்கும்போது பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

இளைஞர்களுக்கே சிரமம் என்றால், முதியவர்களுக்கு? அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் கூட யாரிடமும் சொல்ல முடியாது, மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் செல்ல முடியாது, ஏன்? எழ முடியாத அளவிற்கு உடம்பு சரியில்லை என்றால்கூட யாரையும் அழைக்க இயலாது, அந்த நேரத்தில் தங்கள் பசியைப் போக்கிக்கொள்வதுகூட இயலாத காரியமாகிவிடும்.

அப்படியிருக்க, ஜப்பானில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கள் இல்லத்திலேயே தனிமையில் இறந்து கிடந்திருக்கின்றனர்.

உலகிலேயே அதிக முதியோர்கள் இருக்கும் நாடாக ஜப்பான் இருந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாத கணக்குப்படி சுமார் 37,227 பேர் தங்கள் வீடுகளில் இறந்து கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களில் 70% க்கும் அதிகமானோர் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள். தனியாக இறந்தவர்களில் சுமார் 40% பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர், இதற்கிடையில், ஒரு மாதத்திற்கும் மேலாக 3,939 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:
"மாவட்டத் தலைநகராம் திருப்பத்தூரில் ரயில்களை நிறுத்துங்க சார்" - பொதுமக்கள் கோரிக்கை!
Oldage people in Japan

கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் 7,498 பேர் 85 வயதிற்கும் மேற்பட்டவர்கள். இதைத் தொடர்ந்து 75 முதல் 79 வயதுடையவர்களில் 5,920 பேரும், 70 முதல் 74 வயதுடையவர்களில் 5,635 பேரும் கண்டெடுக்கப்பட்டனர். இதில் ஒரு மாதக்காலமாக வெளியில் தெரியாமல் இறந்து கிடந்த உடல்களின் எண்ணிக்கை 4,000. ஒரு வருடம் வெளியில் தெரியாமல் இருந்தவை 130 உடல்களாகும்.

அந்தவகையில் வருங்காலத்தில் இது எந்தளவுக்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், 2050ம் ஆண்டில், தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை (65 வயது மற்றும் அதற்கு மேல்) 10.8 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் ஒற்றை நபர் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 23.3 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com