அதிகரிக்கும் ஸ்மார்ட் டி.வி விற்பனை – ஆளுக்கொரு டி.வி வாங்கும் காலமும் வந்துவிடும்!

அதிகரிக்கும் ஸ்மார்ட் டி.வி விற்பனை – ஆளுக்கொரு டி.வி வாங்கும் காலமும் வந்துவிடும்!
Published on

வீட்டுக்கொரு  டி.வி வாங்கும் காலம் போய், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையில் வைக்க டி.வி வாங்கும் காலம் வந்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்மார்ட் டி.வி விற்பனை 28% உயர்ந்திருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

முன்பெல்லாம் டி.வி வாங்குவது என்பது பண்டிகைக் காலத்தில் அதிகரிப்பதை பார்க்க முடியும். ஆனால், தற்போது ஆண்டு முழுவதுமே டி.வி விற்பனை கன ஜோராக நடந்து வருவதும், அனைத்து நிறுவனங்களும் தள்ளுபடி தருவதையும் பார்க்க முடிகிறது.

32 இன்ச் முதல் 64 இன்ச் வரையிலான ஸ்மார்ட் டி.விக்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் மைய இடங்களில் பெரிய அளவிலான ஸ்மார்ட் டி.வி இருந்தாலும் தனியறைகளிலும் படுக்கையறைகளிலும் 36 இன்ச் டி.விக்களை வாங்குவது மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் 43 இன்ச் டி.வியை அதிகமாக வாங்கிச் செல்வதாகவும்,  20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான மதிப்பில் உள்ள டி.விக்களுக்கு டிமாண்ட் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டி.வியை பொறுத்தவரை எல்.ஜி, சாம்சங், சோனி போன்ற நிறுவனங்கள்தான் முன்னிலையில் இருப்பதுண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் மாடல்களை மக்கள் தேடி வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒன்பிளஸ், வியூ, டிசிஎல் போன்ற உள்ளூர் மாடல்கள் சர்வதேச மாடல்களோடு விற்பனையில் போட்டியிடுகின்றன.

ஏற்கனவே உள்ளூர் சந்தையில் முத்திரை பதித்துள்ள பி.பி.எல், அட்சன், ஓனிடா போன்ற நிறுவனங்களும் கடந்த ஆண்டில் வளர்ச்சி கண்டுள்ளன. ஸ்மார்ட் டிவி வகையில் 24 சதவீத சந்தை மதிப்பை உள்ளூர் நிறுவனங்கள் தொடர்ந்து  கைவசம் வைத்திருக்கின்றன.

ஸ்மார்ட் டிவியை பொறுத்தவரை ஸியாமி, அதிகபட்சம் வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த ஸ்மார்ட் டி.வி விற்பனையில் 11 சதவீத பங்கு ஸியாமி மாடல் டி.விகளுக்கு கிடைத்திருக்கிறது. அதையெடுத்து எல்.ஜி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் சரிக்கு சரி  போட்டியில் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில்  டாப் 7 டி.விகளில் கடைசி இடத்தில் இருந்த, கிடுகிடுவென்று முன்னேறி ஒன்பிளஸ் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 30 ஆயிரத்திற்கும் குறைவான டி.வி வாங்க நினைப்பவர்களில் 80 சதவீதம் பேர் ஒன்பிளஸ் வாங்குவதாக தெரிவிக்கிறார்கள்.

ஆன்லைன் சானல்கள் அதிகரித்து வருவது டி.வி விற்பனையை பாதித்திருப்பதும் உண்மைதான். டி.வி என்றாலே கேபிள் வழி இணைப்புதான் என்கிற நிலை இருப்பதால் ஓ.டி.டி சானல்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நேரத்தில் தொலைக்காட்சி சேனல்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி  வருகிறது.

ஸ்மார்ட் டி. வியின் விலை கடந்த ஓராண்டில் கணிசமாக குறைந்திருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் 8 சதவீதம் விலையை குறைத்திருக் கின்றன.  இனி, தரமான ஆடியோ, வீடியோ, இலவச டி.வி சேனல்கள், இலவச ஓ.டி.டி சானல்கள், படங்களை சேமித்து வைக்கும் ஆப்ஷன் என அடுத்தக் கட்ட போட்டி ஆரம்பமாகும்.

எது எப்படியோ, இனி வீட்டுக்கொரு டி.வி என்பதெல்லாம் போய், ஆளுக்கொரு டி.வி என்கிற நிலை வந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com