இந்தியா - கனடா உறவுகள் முறிந்தது! கடுமையான பதிலடி கொடுத்த இந்தியா!

India-Canada
India-Canada
Published on

இந்தியாவில் தனி நாடு கேட்கும் காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜார், கடந்த 2023ஆம் ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் ஒரு குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையை ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளன என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை வழக்கில் இந்தியத் தூதர் சஞ்சய்குமார் வர்மா மீது தொடர்பிருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்திய அதிகாரிகளை அவர்கள் விசாரணை செய்ய முடிவு செய்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் உயரதிகாரிகளை திரும்ப பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தது. இந்திய தூதர்களின் பாதுகாப்பில் கனடாவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதம், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு ட்ரூடோ அரசாங்கத்தின் ஆதரவிற்கு பதிலடியாக மேலும் நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்தது.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியா மீதான விரோதப் போக்கு நீண்ட காலமாக உள்ளது. 2018ஆம் ஆண்டில், வாக்கு வங்கியின் ஆதரவை பெற, அவர் மேற்கொண்ட இந்தியப் பயணம் உதவியது. அவரது அமைச்சரவையில் வெளிப்படையாக காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட நபர்கள் இடம்பெற்றுள்ளனர். 2020 டிசம்பரில் அவர் இந்திய உள்விவகாரங்களில் அப்பட்டமாக தலையிட்டார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அவரின் செயல்பாடுகளை இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
289 பேர் சாவுக்கு அதிமுகதான் காரணம் – கே.என்.நேரு காட்டம்!
India-Canada

இந்திய அரசு கனடா நாட்டுக்கான தனது தூதர்களை திரும்ப உத்தரவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்களையும் வெளியேற உத்தரவிட்டுள்ளது. இதன்படி 'ஸ்டீவர்ட் ரோஸ் வீலர், பேட்ரிக் ஹெபர்ட், மேரி கேத்தரின் ஜோலி, லான் ரோஸ் டேவிட் ட்ரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சூப்கா, மபவுலா ஓர்ஜுவேலா ஆகிய 6 தூதரக உயரதிகாரிகளை 19.10.2024 அன்று இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு' உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா கடந்த வெள்ளிக்கிழமை கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது "கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதம் குறித்து செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களால் நான் மிகவும் கவலையடைகிறேன்" என்று கூறினார். சில நாட்களில் ரெட் எஃப்எம் கால்கரியின் ரிஷி நகர் மீதான தாக்குதல்களை மேற்கோள் காட்டி, கிரேட்டர் டொராண்டோ பகுதி மற்றும் கனடா முழுவதும் காலிஸ்தானி தீவிரவாதிகளால் இன்னும் பல தாக்குதல்கள் நடந்துள்ளன என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
News 5 – (15.10.2024) மேம்பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் இல்லை!
India-Canada

மார்ச் 2023 இல், ரேடியோ AM600 இன் சமீர் கௌஷல் காலிஸ்தான் போராட்டத்தை செய்தியாக்கியதால் தாக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். பிப்ரவரி 2022 இல், காலிஸ்தான் தொடர்பான வன்முறையை விமர்சித்ததற்காக பிராம்ப்டன் வானொலி தொகுப்பாளர் தீபக் பஞ்ச் அவரது ஸ்டுடியோவில் தாக்கப்பட்டார். காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து அறிக்கை வெளியிட்டதற்காக மோச்சா பெசிர்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது என்று கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற சீக்கியர்களின் பொதுக்கூட்டத்தில் காலிஸ்தான் முழக்கம் எழுப்பப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள கனடா தூதரை அழைத்து கடும் கண்டனங்களை தெரிவித்தது இந்தியா அரசாங்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com