

பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவுக்கு கடும் போட்டியாளராக பார்க்கப்பட்ட சீனாவுடனான உறவு தற்போது நேர்மறையாக இருப்பதாக பேசினார். இந்தியா-சீனாவுக்கு இடையே சர்ச்சைக்குரிய எல்லையில் இயல்புநிலை திரும்பியுள்ளது என்றும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
2020ல் வடக்கு லடாக் பகுதியில் நிகழ்ந்த கடுமையான எல்லை மோதலுக்கு பிறகு, இந்தியா-சீனா இடையிலான உறவுகள் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், மோதியின் கருத்தை வரவேற்று, "இரு நாடுகளும் ஒருவரின் வெற்றிக்கு ஒருவர் பங்களிக்கும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.இதையடுத்து,சமீபத்தில் இருநாடுகளின் உறவுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து இந்தியா – சீனாவுக்கு இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் டெல்லி - ஷாங்காய் இடையே வாரத்துக்கு 3 நாட்கள் விமான சேவையை வழங்கி வருகிறது.இந்த விமான சேவை இதுவரை வாரத்துக்கு 3 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த சேவையை தினமும் வழங்க இருஅரசுகளும் முடிவெடுத்துள்ளன.
அதன்படி வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் டெல்லி - ஷாங்காய் இடையே தினசரி விமான சேவையை சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளது.இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேலான உறவுகள் மேலும் வலுப்படும் என நம்பப்ப்டுகிறது.