இந்தியக் கப்பல்களுக்கு 'க்ரீன் சிக்னல்'! - ஈரானை பணிய வைத்த இந்தியாவின் 'Look-West' கொள்கை..!

indian ships
indian shipssource:munisifnews
Published on

கடற்படை பாதுகாப்புடன் கட்டணம் எதுவும் செலுத்தாமல், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவை வந்தடையும் கப்பல்கள் குறித்து இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையைப் பார்த்து மேற்கத்திய நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என ரிபப்ளிகன்ஸ் ஓவர்சீஸ் இஸ்ரேல் அமைப்பின் தலைவர் மார்க் செல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் இந்திய கப்பல்களுக்கு அனுமதி கிடைத்திருப்பது அதன் ராஜதந்திரக் கொள்கைகளுக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஈரான்-ஈராக் போர்க்கால சூழலிலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய சரக்கு மற்றும் எரிபொருள் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியா உறுதி செய்துள்ளது. இது இந்தியா- ஈரான் இடையேயான நல்லுறவையும், பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கையும் காட்டுகிறது. போர் பதற்றத்திற்கு நடுவிலும், இந்திய கப்பல்கள் (LPG டாங்கர்கள்) பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவின் சிறந்த ராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது.

ஈரானுடன் இந்தியா மேற்கொண்டு வரும் நேரடி பேச்சுவார்த்தைகள் நல்ல பலனை தந்துள்ளது. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தையும் ஒருங்கிணைப்பும் மட்டுமே சிறந்த வழி என்பதை நிரூபிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரானிய அதிகாரிகளுடன் நடத்திய தொடர் ஆலோசனைகள் மூலம் இந்திய கப்பல்களுக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான எரிசக்தி தேவைகள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்கள் மூலம் நிறைவேறுவதால் இந்த ராஜதந்திர முயற்சி நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. இந்திய கடற்படை, அரேபிய வளைகுடா நாடுகளில் தனது இருப்பை வலுப்படுத்தி, 'Look-West' கொள்கையின் கீழ் பிராந்தியத்தில் ஒரு நம்பகமான பங்காளியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த ராஜதந்திர திறமையை மேற்கத்திய நாடுகள் பாராட்டியுள்ளன. ஈரான் மற்றும் பிற பிராந்திய நாடுகளுடன் உள்ள நட்புறவு, இந்தியாவின் கடல்சார் ராஜதந்திரத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தவெக-வினர் ஷாக்..! விஜய் பங்கேற்கும் பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு..!
indian ships

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com