அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா:பாதிப்பை சந்தித்துள்ள உலக நாடுகள்!

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா:பாதிப்பை சந்தித்துள்ள உலக நாடுகள்!

ந்தியாவில் நிலவும் அரிசியின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாட்டின் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி இல்லாத அரிசி வகைகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்காற்று வருகிறது. உலகில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசிகளில் 40 சதவீதம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கடந்த ஆண்டில் மட்டும் 10.3 மில்லியன் டாலர் அரிசிகளை இந்தியா உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. 

மேலும் உலகம் முழுவதும் அரிசி முக்கிய உணவுப் பொருளாக இருப்பதால், அதிக தேவைப்படும் உணவுப் பொருளாகவும் அரிசி கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாகவும், தற்போது வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகவும், அதேசமயம் தென் மாநிலங்களில் மழையே இல்லாமல் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாகவும் அரிசியினுடைய விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ரஷ்யாவுக்கு அதிகப்படியான உணவு பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்வதாலும் மற்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய உணவுகள் தட்டுப்பாடு நிலவுகிறது.

இப்படி பல்வேறு இக்கட்டான சூழல்களுக்கு நடுவில் அரசியலுடைய உற்பத்தி குறைவும், இருப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாலும் இந்தியாவில் அரிசி என்னுடைய விலை அதிகரிக்க தொடங்கியது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பாஸ்மதி அல்லாத அரிசிகள் ஏற்றுமதிக்கு  தடை விதித்து மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அமெரிக்காவில் அரிசியை  வாங்க மார்க்கெட்டுகளில் போட்டிகள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தியாவின் இந்த அறிவிப்பின் காரணமாக அமெரிக்கா, துருக்கி, சிரியா, தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு இந்தியா கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com