நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் (Ethanol Blended Petrol (EBP) Programme)ஒரு பகுதியாகும்.
இந்த இலக்கை நிறைவேற்றுவது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas) மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள எரிபொருளின் முக்கிய கூறான. “பெட்ரோல்” (E5) அதிக பட்சமாக 5%-க்கு குறைவான எத்தனால் கலப்புடன் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இனி பயன்படுத்தப் போகும் E20 என்பது 20% எத்தனால் (Ethanol ) + 80% இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் (biofuel) கலவையாகும்.
பயோ பெட்ரோலின் முக்கியக் கூறான எத்தனால் (Ethanol) இது கரும்பு (Sugarcane juice / Molasses) ,மக்காச்சோளம் (Maize) சேதமடைந்த அரிசி / தானியங்கள் விவசாய கழிவுகள் (2G ethanol) போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை, E20 பெட்ரோல் பயன்பாடு வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையைக் குறைத்து காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.
E20 பெட்ரோல் பயன்பாடு இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் சார்பை குறைக்கவும் ,வெளிநாட்டு செலாவணியை சேமிக்கவும், விவசாயிகளுக்கு (சர்க்கரை கரும்பு, தானியங்கள்) கூடுதல் வருமானம் பெறவும் , முக்கியமாக காற்று மாசுபாட்டை குறைக்கவும் வழிவகுக்கும் எனப்படுகிறது.
மேலும் இதில் குறைந்தபட்ச ஆர்.ஓ.என்., தரம் கட்டாயமாக 95ஆக இருக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ20 எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதற்கு, 2023 - 25 முதல் தயாரிக்கப்படும் வாகனங்களே பெரும்பாலும் ஏற்றவை. பழைய வாகனங்களில் மைலேஜ் குறையலாம். ரப்பர், பிளாஸ்டிக் பாகங்கள் சேதமடையலாம்.எனவே, இன்ஜின் சேதத்தை தடுப்பதற்காகவே இ20 பெட்ரோலில் ஆர்.ஓ.என்., 95 தரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2023 மற்றும் அதற்கு பிறகு செய்யப்பட்ட புதிய வாகனங்கள் E20-க்கு பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதிகமான பிரச்சினை இல்லை.
இனி காற்று மாசுபாடு இல்லாமல் சாலைகளில் பயணிக்க ஏதுவாக ஏப்ரல் 1 முதல் இந்தியாவின் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் E20 தான் கிடைக்கக் கூடும். அதற்கேற்ப மாநில அரசுகளும் E20 பெட்ரோல் கிடைக்க வழிவகுக்கும் வகையில் செயல்படும் எனத் தெரிகிறது.