இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள வரி 50 சதவிகிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஆனால் இது? அறிவிப்பா ?வர்த்தக ஒப்பந்தமா என்பது குறித்து நிபுணர்கள் முடிவுக்கு வர முடியாத நிலை உள்ளது. ஏனெனில் இந்தியாவிற்கென வர்த்தக ஒப்பந்த நடைமுறை உள்ளது.
இந்தியா பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு நிறைவேற்றும்போது சில பொதுவான நடைமுறைகளை பின்பற்றும். அதனால்தான் வெளியானது வர்த்தக ஒப்பந்தம் அல்ல அறிவிப்பு என்ற கருத்து நிலவுகிறது.
இந்தியா பிற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்கும் பொதுவான நடைமுறைகளை பின்வருமாறு காண்போம்.
* ஒப்பந்தம் மேற்கொள்ளும் இரு நாடுகளும் ஒப்பந்தத்தின் பயன் மற்றும் பாதிப்புகளை முதலில் மதிப்பீடு செய்யும்.
* நடைமுறையில் ஒப்பந்தம் சாத்தியமா என்பது குறித்து அறிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
* ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய துறைகள் குறித்தும் அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும் தீர்மானிக்கப்படும்.
* அதற்கு அடுத்து இரு நாடுகளின் பேச்சுக்காக அமைக்கப்படும் குழுக்கள் அதிகாரப்பூர்வமாக தங்களது ஆலோசனையை துவங்கும்.
* இவ்வாறு ஆலோசிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும் பேச்சுகளில் இரு நாடுகளின் கருத்து வேறுபாடுகள் குறைக்கப்பட்டு முடிவுக்கு வர முயற்சி செய்யப்படும்.
* அதன் பிறகு இறுதியாக ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு சட்டரீதியாக அது பரிசீலிக்கப்படும்.
* இந்த நிகழ்வில் பல அமைச்சகங்களும் தூதரகங்களும் பங்கேற்கும்.
* பிறகு இந்த வர்த்தக ஒப்பந்தம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின் கையெழுத்திடப்படும்.
* இறுதியாக பார்லிமென்டில் ஒப்புதல் பெற்ற பின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் இந்தியா- அமெரிக்கா கூட்டு அறிக்கை விரைவில் வெளியிடப்பட்டு, ஒப்பந்தம் இறுதி அடையும் நிலையில், அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதி பொருள்களான வரி 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவீதமாக குறையும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயில் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது.