11 வது மாடியில் இருந்து குதித்து 17 வயதுச் சிறுமி தற்கொலை!

11 வது மாடியில் இருந்து குதித்து 17 வயதுச் சிறுமி தற்கொலை!

ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசவேஸ்வரா சர்க்கிள் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இருந்து குதித்து 17 வயது சிறுமி ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். மனஅழுத்தம் தான் இந்த தீவிர நடவடிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது.

சஞ்சய் நகரில் வசிக்கும் பிரக்ருதி, அரண்மனை சாலையில் உள்ள சோபியா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மாலை 6.45 மணியளவில் ஹை பாயிண்ட்-3 அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரக்ருதி தனது தோழி அங்கு வசிப்பதாக பாதுகாவலரிடம் கூறி அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து கட்டிடத்தின் 11வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்தார். பிரக்ருதி நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மீது விழுந்து பின்னர் தரையில் விழுந்தார், உடனடியாக இறந்தார்.

"இறந்தவரின் அடையாளம் அவர் வைத்திருந்த மொபைல் ஃபோனின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதன் மூலமாக அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமி தற்கொலை வழக்கு குறித்த முதற்கட்ட விசாரணையில், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்துள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர்.

ஹை பாயிண்ட்-3 க்குள் நுழைவதற்கு முன்பு,சிறுமி அருகிலுள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைய முயன்றிருக்கிறார், ஆனால் காவலாளி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. நாங்கள் வழக்குப்பதிவு செய்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். ஹைகிரவுண்ட் போலீசார் சிறுமி தற்கொலையை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com