மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதமாக உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி  4 சதவீதமாக உயர்வு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜனவரி 1 2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அறிவித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான DR 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

7 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் ஓய்வூதியர்களுக்கான DR 42% ஆக உயர்த்தப் பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 38 சதவீத்ததிலிருந்து 4% உயர்ந்து 42 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் ஆண்டுக்கு இருமுறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அளிக்கப்படும் இந்தியாவில் விலைவாசி சுமையை குறைக்க மத்திய அரசு இந்த அகவிலைப்படி மூலம் ஈடு செய்கிறது.

இந்த ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வும் ஜனவரி 1 2023 முதல் மத்திய அரசு ஊதியம் பெறுபவர்களுக்கு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும். லட்சக் கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் அக விலைப்படி நிவாரண ஊக்கத்தை மார்ச் மாத சம்பளத்தில் பெற உள்ளனர். பணவீக்கத்தை சமாளிக்க மத்திய ஊழியர்களுக்கு இந்த விலை உயர்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும் .

அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com