35 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் 88 வயது முதியவருக்கு ரூ.5 கோடி பரிசு!

35 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் 88 வயது முதியவருக்கு ரூ.5 கோடி பரிசு!

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அது லாட்டரிச் சீட்டுகளில் பரிசு கிடைப்பவர்களுக்கு பொருந்தும். புதையல் போல பணம் கொட்டுவதும் லாட்டரி சீட்டில் பணம் கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

லாட்டரியில் பணம் அடிக்காத என லாட்டரி பிரியர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த முதியவருக்கு ரூ.5 கோடி லாட்டரி பரிசாக கிடைத்துள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்தவர் மஹந்த் துவாரக தாஸ். 88 வயதான இவருக்கு லாட்டரி சீட்டு வாங்குவதில் அலாதி பிரியம், கடந்த 35 ஆண்டுகளாக இவர் விடாமல் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். ஆனால், பரிசுதான் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கினார். இப்போது பஞ்சாப் லாட்டரியின் மகர சங்கராந்தி பம்பர் குலுக்கலில் இவருக்கு ரூ.5 கோடி லாட்டரி பரிசாக கிடைத்துள்ளது.

மஹந்த் துவாரக தாஸுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான நரேந்தர் குமார் சர்மா கூறுகையில், சமீபத்தில் என் தந்தை, பேரனிடம் பணம் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கி வரச்சொன்னார். அந்த சீட்டுக்குத்தான் இப்போது பரிசு விழுந்துள்ளது. தாத்தாவுக்காக என் மகன் வாங்கிய சீட்டுக்கு பரிசு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு விழுந்துள்ளதே? அதை என்ன செய்யப்போகிறீர்கள் என்று துவாரகா தாஸிடம் கேட்டதற்கு, 35 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்தேன். இப்போது எனக்கு பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வயதாவிட்டது. அந்த பணத்தை எனது இரண்டு மகன்களிடம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

லாட்டரியில் அவருக்கு ரூ.5 கோடி பரிசாக கிடைத்தாலும் முழுப் பணமும் கிடைக்காது. 30 சதவீதம் வரிப் பிடித்தம் செய்யப்பட்டு மீதி பணம் தான் அவருக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார் அரசு லாட்டரி தவி இயக்குநர் கரம் சிங்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com