மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணை! புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொண்டு ஆதரவு!

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணை! புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொண்டு ஆதரவு!

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக நிற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது .

நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் “ இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!” என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com