வெப்பம் அதிகரிப்பதால் தொழிலாளர்கள் பாதிப்பு, நாட்டின் GDP குறைய வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகரிப்பதால் தொழிலாளர்கள் பாதிப்பு, நாட்டின் GDP குறைய வாய்ப்புள்ளது.

ந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப்ப அலைகளால் தொழிலாளர்கள் மன அழுத்தத்தை சந்திப்பதாகவும் இதனால் நாட்டின் ஜிடிபி குறையக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலம் காலமாக அக்னி நட்சத்திரம் பற்றியே மக்கள் அச்சப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வெப்ப அலைகள் சார்ந்தும் அடிக்கடி பேசப்படுகிறது. கோடைக்காலங்களில் சராசரியாக இருக்கும் வெப்பநிலையை விட அதிக அளவில் வெப்பம் பதிவாகி, இரண்டுக்கும் மேற்பட்ட நாட்களுக்கு அது நீடித்தால் வெப்ப அலை வீசுவதாக வானிலை மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். இந்த சமயத்தில் வெப்பமானது தொடர்ச்சியாக 45 டிகிரி செல்சியலுக்கும் அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் இந்த வெப்ப அலையின் தாக்கத்தினால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். 

இந்தியாவில் மட்டும் இந்த வெப்ப அதிகரிப்பினால் சுமார் 75% தொழிலாளர்கள் மன அழுத்தத்தை சந்திப்பதாகவும், இப்படியே தொடர்ந்தால் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 2.5-4.5 சதவீதம் வரை இழக்க நேரிடும் என, மெக்சிகன் குளோபல் இன்ஸ்டிட்யூட் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மேலும், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் தற்போது பதிவாகியுள்ள வெப்ப குறியீட்டை அதன் காலநிலை பாதிப்பு குறியீட்டோடு ஒப்பீடுசெய்து ஆராய்ச்சி செய்தனர். வெப்பக் குறியீடு என்பது வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து, மனித உடலானது எவ்வளவு வெப்பத்தை உணர்கிறது என்பதைக் காட்டும் அளவீடாகும். அதேபோல காலநிலை பாதிப்பு குறியீடு என்பது, வெப்ப அலைகளினால் பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் உயிர் இயற்பியல் போன்றவை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் குறியீடாகும். 

எனவே இந்தியாவின் நிலையான முன்னேற்றத்தை வெப்ப அலைகள் குறிப்பிட்ட அளவில் தடுக்கிறது என்றும், இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.  வெப்ப அலைகளானது 1992ம் ஆண்டு முதல், 24000 இறப்புகளுக்கு மேல் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வட இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் பனிப்பாறை உருகும் நிகழ்வு அதிகரித்துள்ளது. 

தற்போது இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலையானது, சமவெளிகளில் 40 டிகிரியாகவும், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரியாகவும், மலைப்பாங்கான பகுதியில் 30 டிகிரியாகவும் இருந்து வருகிறது. இது வெப்ப அலையின் காரணமாக குறைந்தது 4 டிகிரி வரை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. 

2023 இல், பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி இருந்தது. இருப்பினும் மார்ச் மாதத்தில் சில மழைப் பொழிவு காரணமாக வெப்பநிலை கட்டுக்குள் வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், கடந்த 121 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத வெப்ப அளவானது பதிவாகி இருந்தது.

எனவே இந்த ஆண்டு அதிக வெப்பத்தை சந்திக்க மக்கள் தயாராக இருங்கள் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com