மத்தியப் பிரதேச பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா! பெண்களுக்கு ரூபாய் 1000/- அறிவிப்பு!

மத்தியப் பிரதேச  பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா! பெண்களுக்கு ரூபாய் 1000/- அறிவிப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மத்தியப் பிரதேச மாநிலத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா தாக்கல் செய்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் ஷவ்கன் அரசு தனது நான்காவது பதவி காலத்தில் இறுதி ஆண்டு 23-24 பட்ஜெட்டை நேற்று சட்ட சாதியில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு உட்பட அனைத்து கட்சிகளும் இப்போதே தயராகி வருகிறது. இந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தது மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் ஷவ்கன் அரசு.

நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான முதலமைச்சரின் ஸ்கூட்டி திட்டத்தையும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது,

12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என நிதிமந்திரி அறிவித்துள்ளார்.

பழங்குடியின வகுப்பினருக்காக செயல்படுத்தப்படும் உணவு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'முக்யமந்திரி லட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினரான பைகா, பரியா மற்றும் சஹாரியா குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆதார் அனுதய யோஜனாவின் கீழ் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும். என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com