ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பரமானந்த் காலமானார்!

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பரமானந்த் காலமானார்!

இந்துஜாவின் நான்கு சகோதரர்களில் மூத்தவரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான ஸ்ரீசந்த் பர்மானந்த் ஹிந்துஜா புதன்கிழமை லண்டனில் காலமானார். அவர் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு வயது 87.

நான்கு சகோதரர்களில் மூத்தவரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான எஸ்பி ஹிந்துஜா இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது மனைவி மதுவை இழந்தார். இவருக்கு ஷானு மற்றும் வினு என்ற மகள்கள் உள்ளனர்.

ஹிந்துஜா குடும்பத் தலைவர் மற்றும் அவரது சகோதரர்கள், கோபிசந்த் மற்றும் பிரகாஷ் உள்ளிட்டோர், ஸ்வீடன் நாட்டு துப்பாக்கி தயாரிப்பாளரான AB போஃபர்ஸ் இந்திய அரசாங்க ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு உதவுவதற்காக, ஸ்வீடன் பண மதிப்பில் கிட்டத்தட்ட SEK 81 மில்லியன் தொகையை சட்டவிரோத கமிஷனாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

தற்போது ஸ்ரீசந்த் பரமானந்த் மறைவை ஒட்டி சகோதரர்கள் கோபிசந்த், பிரகாஷ், அசோக் மற்றும் ஹிந்துஜா குடும்பம் முழுவதும் தங்கள் குடும்பத் தலைவரும், ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான திரு எஸ் பி ஹிந்துஜா இன்று காலமானதை மிகுந்த மன வருத்தத்துடன் அறிவிப்பதாக அக்குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவரான பரமானந்த் லண்டனில் இறந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com